Pages

Friday, June 8, 2012

புலியுடன் பேசிய கருணை நாயகம்


புலியுடன் பேசிய கருணை நாயகம் 

ஹஜ்ரத் நாயகம் அவர்கள் குவாலியரை நோக்கி வந்து கொண்டு இருந்த போது முயினுத்தீன் என்ற ஒருவர் வழியில் நட்பானார் ( முயினுத்தீன் அவர்கள் துருக்கி தேசத்தை சேர்ந்த்த பலிக்கு என்ற வூரில் பிறந்தவர், மெய்ஜான வழிகளில் நாட்டம் மிகுந்தததால் தேச சஞ்சாரம் கிளம்பியவர்கள் , நமது ஹஜ்ரத் நாயகத்தின் பல கராமத்தினை கண்கூடாய் கண்டவர்கள் ) முயினுத்தீனையும் தன்னுடன் அழைத்து கொண்டு ஹஜ்ரத் நாயகம் அவர்கள் காடு மலை கடந்து குவாலியரை நெருங்கி கொண்டு இருந்தனர். அன்று ஒரு நாள் அடர்ந்த காட்டில் இருந்து ஒரு வேங்கை வெளிப்பட்டது.  வேங்கையை கண்டதும் முயினுத்தீன் அவர்கள் பயந்தார்கள். வெளிவந்த வேங்கையோ அல்லாஹ்வின் வலியே !! என் ஜென்மம் புனித மாகட்டும் கால் நோக தாங்கம் நடந்து செல்வது எனக்கு சகிக்க முடியவில்லை என் முதுகிலே ஏறி கொள்ளுங்கள் என கெஞ்சியது.. அதற்க்கு நாயகமோ !! புலி சவாரி  செய்ய நான்  இங்கு வரவில்லை.. வலியுல்லாஹ்வின் வழியில் வந்து வலி அறிந்து உதவி செய்ய நினைக்கும் உன்னை எல்லாம் வல்ல அல்லாஹ்  மகிழ்விப்பானாக!! என தன வழி நடந்தார்கள். வியப்புற்று நின்ற முயினுத்தீனிடம் எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு பயப்புடுகிறானோ அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தும் அவனுக்கு உதவிபுரிகின்றன என்று கூறினார்கள் 

No comments:

Post a Comment