பட்ட மரம் தழைத்த விஷயம்
நான்கு திசைகளிலும் ஹஜ்ரத் நாகூர்
அப்துல் காதிர்
ஷாகுல் ஹமீத் ஆண்டகை அவர்களின் பெயரும் புகழும்
பரவி வந்தது.
பாரசீக நகரில்
மக்களின் நோய் தீர்த்து கலி தீர்த்து வந்தார்கள். அப்போது அங்கு மஹ்மூது கான் என்ற செல்வந்தர் இருந்தார். அன்னார் ஹஜ்ரத் நாகூர்
அப்துல் காதிர்
ஷாகுல் ஹமீத் ஆண்டகையை சந்திக்க
வந்த போது மக்மூதே !!! உமது இல்லத்தருகே உள்ள பட்ட மரம் தழைத்ததா
!! என வினவியதும் ஆண்டகையின் பாதம் பணிந்து என்னை மன்னித்து அருள வேண்டுகிறேன்.. எனக்கு
ஆண்டவன் சகல பாக்கியத்தையும் கொடுத்ததான், ஆனால் சந்தன பாக்கியத்தை கொடுக்கவில்லை. தங்களை பற்றி கேள்வி பட்டேன்.
தாங்கள் உண்மையிலேயே சக்தி உள்ளவராக
இருந்தால் என் எதிரில் உள்ள இந்த பட்ட மரம் தழைக்கட்டும் என்றேன்.. உடனே தழைந்த்தது. தங்களை
சந்தேகித்த இந்த கொடும்பாவியை மன்னித்து எனக்கு புத்திர
பாக்கியம் அருள வேண்டும் என கதறினார். புன்னைகித்த நாயகம் அவர்கள்
அவரை ஆறுதல்
படுத்தி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். பின்னர் அவருக்கு
இரண்டு ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் பிறந்தனர்.
No comments:
Post a Comment