திரும்பி வந்த திருவோடு
அம்மலையில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட சின்னியாசிகள் இருந்து வந்தனர். அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் ரிக்வத் எனும் திரு வோட்டிலிருந்து தனது சீடர்களுக்கு உணவு வழங்குவதை கண்ட சந்நியாசிகள் தங்களுக்கும் உணவு வழங்க கோரிக்கை விடுத்தனர். அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களுக்கு சங்கடமாயிர்று.. சந்நியாசிகளே என் தந்தை வரும் வரை பொறுத்து கொள்ளுங்கள், அனாரின் உத்தரவின்றி எம்மால் தங்களுக்கு உதவ இயலாது என மனமுருகி கூறினார்கள்.
குறுப்பிட்ட நாளில் திரும்பி வந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் சந்நியாசிகளின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்தார்கள். திருவோட்டு அருள் உணவின் ருசி சந்நியாசிகளின் நாவை மட்டுமல்ல மனதையும் பாதித்தது. இந்த ஒற்றை திருவோடு கிடைத்தால் தங்கள் வாழ் நாள் முழுவதும் உணவுக்கு பஞ்சமில்லை என எண்ணிய அவர்கள் அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் இரவு தூங்கி கொண்டு இருந்த போது அந்த திருவோட்டை திருடி மண்ணில் புதைத்து அதன் மேல் தன் தலைவனை தியானம் செய்யுமாறு செய்துவிட்டனர்.
மறுநாள் திருவோடு காணாமல் அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் திகைத்தார். அண்ணல் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையிடம் முறையிட்டார். உடன் இருந்த சீடர்கள் சன்னியாசிகளிடம் கேட்ட போது , வெகுண்டெழுந்த சந்நியாசிகள் எங்களையா திருடர்கள் என கூறுகிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.
இதையெல்லாம் கண்ட ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களை அழைத்து , கிஸ்தியே !! அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு என்னிடம் வா என அழையுங்கள் என கூறினார். அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் அழைத்ததும் பூமியில் புதைக்கப்பட்ட திருவோடு தலைவரை குப்புற தள்ளி அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் கைக்கு வந்தது. சந்நியாசிகள் திகைத்தார்கள்.
ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை பாதம் தணிந்து மன்னிப்பு கேட்டார்கள். அவர்களை மன்னித்து விட்ட ஆண்டகை கூறினார்கள். நீங்கள் எல்லாம் சந்நியாசிகள், நகரை விட்டு, மனைவியை விட்டு, குடும்பம் விட்டு மாதவம் புரிந்து உள்ளீர்கள். இவற்றால் என்ன பயன். கேவலம் மனித்யனிடம் இருக்க கூடிய திருட்டு குணத்தை கூட தங்களால் ஒழிக்க முடியவில்லையே.. ஷைத்தான் காண்பித்த வழியில் இறைவனை தேடி என்ன பயன் என விளக்கினார்கள். சந்நியாசிகள் கதறி அழுதார்கள். சரியான இலக்கை காண்பிக்க கண்ணீர் மல்க வேண்டினார்கள். இறக்கம் கொண்ட கருணை வள்ளக் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களுக்கு சரியாத்தை போதித்து அனைவருக்கும் கலிமா சொல்லி கொடுத்து இஸ்லாத்தை தழுவ செய்தார்கள்.பின்னர் தன் சீடர்களுடன் திருச்சி நத்தர்( ரலி ) அவர்களுடன் ஆத்மீகமாய் உரையாடி தஞ்சையை நோக்கி பயணமானார்கள்.

No comments:
Post a Comment