தந்தையின் நினைவு
ஜபருல் அதவிய்யா என்ற இடத்தில்
தங்கியிருந்த போது ஒரு நாள் இஷா தொழுகை
முடிந்ததும் ஹஜ்ரத் நாகூர் அப்துல்
காதிர் ஷாகுல்
ஹமீத் ஆண்டகை அவர்கள் சொன்னார்கள். நண்பர்களே !! நாளை காலை எனது தந்தை இறைவனடி சேர போகிறார். அப்போது
நாம் அங்கிருக்க வேண்டும் என கூறினார்கள். கேட்டவர்கள் திகைத்தார்கள். ஒரே இரவில் இங்கிருந்து எப்படி இந்தியா
போய் சேருவது
என எண்ணி கொண்டு இருக்கையில் "புறப்படுங்கள் " என்ற ஆண்டகையின் கட்டளை கேட்டது.
பொழுது புலர அனைவரும் மாணிக்கபூர் வந்து விட்டதை
உணர்ந்து ஆச்சர்ய
பட்டார்கள். தாங்கள்
இத்தனை நாள் செய்து வந்த பயணம் திரும்ப
வரும் போது ஒரு இரவில்
சுருங்கியதை எண்ணி வியந்தார்கள்.
ஹிஜ்ரி 948 ம் ஆண்டு ஜாம்துல் அவ்வல்
ஐந்தாம் நாள் அதிகாலையில் ஹஜ்ரத் நாகூர் அப்துல்
காதிர் ஷாகுல்
ஹமீத் ஆண்டகை அவர்களின் தந்தையார் ஹஜ்ரத் செய்தின
செய்யது ஹசன் குத்துஸ் அவர்கள்
இறைவனடி சேர்ந்தார்கள். ( இன்னாளில்லஹி....) அதற்க்கு பின் ஐந்தாம் நாளில்
ஆண்டகையின் தாயாரும்
தம் கணவரை தொடர்ந்ததாக சில நூல்களில் கூறபடுகிறது. வேறு சிலவற்றில் தனது தாயாரை
கவனித்து கொள்கிற
பொறுப்பை தம் சகோதரரிடம் ஒப்படைத்து விட்டு தந்தை மரணித்த நாற்பாதம் நாள் ஹஜ்ரத் நாகூர் அப்துல்
காதிர் ஷாகுல்
ஹமீத் ஆண்டகை அவர்கள் மார்க்க
பயணம் நோக்கி புறப்பட்டதை காணபடுகிறது..
No comments:
Post a Comment