Pages

Friday, June 8, 2012

தந்தையுடன் இணைந்த பால நாயகம்


தந்தையுடன் இணைந்த பால நாயகம் 

மக்காவிலிருந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தன மைந்தன் தன்னை நாடி வருவதை தன் சக்தியால் உணர்ந்து தனது இரு சீடர்களை அழைத்து விவரித்து அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களை அழைத்து வரும்படி கூறினார்கள்

சீடர்களோ நடந்து வரும் அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களை தோள் மேல் சுமந்து வந்து ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையோ அன்பு மகனே !! என உச்சி முகர்ந்து அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களை தன்னுடம் அழைத்து முசாப் செய்தார்கள்

ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் ஒரே இரவில் முழு திருக்குரானையும் எழுதி முடித்தார்கள், பின்னர் அதனை தனது மைந்தனிடம் கொடுத்து ஓத சொன்னார்கள். அவ்விதமே அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் மகிழ்ந்து ஓதி ஆண்டவனை புகழ்ந்து பாடினார்கள். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை எழுதிய அந்த திருக்குர்ஆன் இன்னும் நாகூரில் இருக்கிறது 

No comments:

Post a Comment