Pages

Friday, June 8, 2012

பஞ்சம் தீர்த்த பிடி தானியம்


பஞ்சம் தீர்த்த பிடி தானியம் 

அன்னை  செயிதத்து பாத்திமா சூல்கொண்ட ஏழாவது மாதம், மாணிக்கபூர் நகரம் எங்கும் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. அந்நாளில் மானியங்கள் பெற்ற செல்வந்தர்களே ஒரு தானியத்தை பார்க்கும் ஆவலில் இருந்தனர், மாடுகளும் மனிதர்களும் மாண்டு விழும் அவலம் தினம் தினம் நடந்தேறியது.

ஹஜ்ரத்  செய்யது ஹசன் குத்தூஸ் ( ரலி ) அவர்களும் அன்னையாரும் அந்நிலை கண்டு பெரிதும் வருந்தினர்.தங்கள் கையிருப்பில் இருந்த தானிய மணிகளை தானமாக கொடுத்தாயிற்று , இன்னும் கொஞ்சம் தானியம் தானே இருக்கிறது, இதையும் கொடுத்து விடலாமா ? எப்படி மக்களின் பஞ்சம் தீர்ப்பது என்று யோசிக்கும் வேளையில் , " எனதருமை பெற்றோரே !! தங்களிடம் இருக்கும் தானியத்தில் ஒரு பிடி தானியம் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சமைத்து நகர மக்களுக்கு விநியோகம் செய்யுங்கள், பின்னர் தாங்களும் புசியுங்கள் பஞ்சன் தீரும் வரை இப்படியே செய்து வாருங்கள் !! அல்லாஹ் அருள் பாளிப்பானாக " என்று மென் குரல் கேட்டது. என்ன விந்தை !! ஒரு பிடி தானியத்தால் சமைக்கப்பட்ட உணவு நகரம் முழுக்க விநியோகித்தும் தாங்களும் உண்கிற வரை குறையவில்லையே !! என வியந்திடினும் பஞ்சம் ஒழிகிற வரை அம்முறையை கைகொள்ள தவறவில்லை..

No comments:

Post a Comment