Pages

Friday, June 8, 2012

Book Front Page






குறிப்பு : இந்த புத்தக கட்டுரை இன்டர்நெட் புத்தக வடிவில் அப்லோட் செய்வதால் உள்ளடக்கம், பகுதி தலைப்பு, பக்க எண் போன்றவற்றை எடுத்து விட்டு இனைதலைப்புகளை மட்டும் அப்லோட் செய்துள்ளோம். புத்தக வடிவில் அனைத்து விபரமும் இருப்பதால் பக்த கோடிகளை புத்தக வடிவில் வாங்கி படிக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

புத்தகங்களை பெறவும் / மேலும் தொடபுக்கும் :-

ஆசிரியர் : செய்து முஹம்மது கலிபா சாஹிப் காதிரி
நாகூர் ஹஜ்ரத் ஆண்டகை வழி தோன்றல் / ஆதீனம், 
நாகூர் தர்கா சஜ்ஜாத நிஷின் / பங்குதாரர், 
3 , கலிபா சாஹிப் தெரு
நாகூர் - 611002 நாகை மாவட்டம் , தமிழ் நாடு , இந்தியா.
தொலை பேசி : 0091 96774 10786  / 0091 98424 41404       
மின்னஞ்சல் : kalifa.sahib@gmail.com / nagoredargha@gmail.com

=============================================================================================




ஆசிரியர் உரை ..


                      பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஆசிரியர் உரை ..

யா காதிர் முராத் ஹாசில் !!


எல்லா புகழும் இறைவனுக்கே.. இணை துணையற்ற எல்லாம் வல்ல ரஹ்மானின் நாட்டப்படியும் , அல்லாஹ்வின் ஹபீபும் நமகெல்லாம் ரசூலும் எனது பெரும் பாட்டனாராகிய ஹாத்திமுல் அன்பியா,  உலகின் இறுதி நாளில் நம்மை எல்லாம் காத்து ஷபாஅத்து செய்து காப்பாற்ற போகும் என் குல கோமான் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களை புகழ்ந்தும் , அன்னாரின் தோழர்கள் அனைவரையும் புகழ்ந்தும் , அன்னார் கிளையில் வந்த ஹஜ்ரத் இமாம் ஹசன் ( ரலி ), ஹஜ்ரத் இமாம் ஹுசைன் ( ரலி ) அவர்கள் குல வழியில் தோன்றிய செய்குல் அக்ரம் ஹஜ்ரத் செய்தின கெளத்துல் அஹ்லம் செய்யது அப்துல் காதிர்  முஹையதீன் ஜீலானி பக்தாதி ( ரலி ) துவா பரக்கத்தை கொண்டும் மற்றுமுள்ள ஏனைய குதுபுமார்கள், நாதாக்கள், அன்பியாக்கள், அவ்லியாக்கள் துவா பரக்கத்தை கொண்டும், கருனைகடல் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் நாயகத்தின் அருளை கொண்டும் அன்னாரின் தவப்புதல்வர் ஹஜ்ரத் சுல்தானுல் ஸாலிஹ், சுல்தானுல் ஆரிப், சுல்தானுல் மஷாயிகு, ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் காதிரி ஆரிபில்லாஹ் அவர்களின் அருளை கொண்டும் எனது பாட்டனார் சாஹிப்ஜாதா ஹஜ்ரத் செய்யது மக்தும் கலிபா சாஹிப் காதிரி சத்தாரி மற்றும் எனது தந்தை ஹஜ்ரத் செய்யது காமில் சாஹிப் காதிரி சத்தாரி அவர்களின் ஆசிர்வாதத்தோடு இந்த கட்டுரையை தொடங்குகிறேன். 

எனது பாட்டனார் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் நாயகத்தை பற்றி ஒரு சில புத்தகங்கள் வந்து இருந்தாலும் அவை எல்லாம் ஒரு சில மொழிகளில் மட்டுமே வந்துள்ளது. உலகெங்கும் உள்ள பல தரப்பட்ட மொழியில் இதனை வெளியிட வேண்டும் என சிறிய அவாவினினாலும் எனது பாட்டியார் ஹாஜியா செய்யது ஜொஹரா பீவி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பாட்டியரால் எனக்கு சொல்லி காட்டப்பட்ட எனது பாட்டனாரின் பல குறிப்பு வாழ்க்கை முறைகளை,  பலதரப்பட்ட ஏடுகளில் சேகரித்து / நானே எழுதி / தொகுத்து வழங்கும் ஒரு சிறிய முயற்சியே இது. மூதாதையரின் பங்களிப்பு வருங்கால தலைமுறைக்கு கட்டாயம் நிச்சய தேவை, நம்மில் பலர் அறிந்திராத அதிசியங்கள் நாதாவின் வாழ்க்கையிலே.. அறிந்த்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த ஒரு சிறிய முயற்சி.. 

காலங்கள் மாறுகின்றன.. காட்சிகள் மாறுகின்றன.. கருணை உள்ளம் தொடர்கிறதே.. கருணை கடல் தொடர்கிறதே.. கருணை நாதாவின் கராமத்தும் தொடர்கின்றன..  தெரிந்ததை அறிந்ததை புரிந்ததை பகிர்ந்ததை படித்ததை கேட்டதை கேள்விப்பட்டதை சிறுக சிறுக சேகரித்து என் முதல் முத்து மணி மாலையாக இந்த நூலின் வடிவம் தொகுத்தளித்துள்ளேன்.

ஹதீசுகள் மேற்கோள் காட்டி எழுத நான் ஒன்றும் முற்றும் அறிந்த மவுலவிமார்கள் அல்ல.. புழமையில் பொருளுடைத்து பேச நான் தமிழ் கவி நாதரும் அல்ல... காருண்யா ஜோதி நாகூர் நாதவின் / மானிக்கபூரின் மாணிக்கத்தின் / எம் பாட்டரனரின் புகழ் பாட நினைத்த  ஆயிரனக்கனக்கான பேரர்மார்களின் உள்ளத்தில் உள்ள ஆசையை ஒரு சிறு துளியாய் வெளிபடுத்திருக்கும் ஒரு பேரனின் வெளியீடு. என் மனதுள் நீண்ட நாளாக புதையுண்டு கிடந்த ஆவலை (பொக்கிஷமாக) இந்த புத்தகமாக வெளியிடுவதில் மட்டட்ட மகிழ்ச்சி.. 

நான் எழுதியுள்ள இந்த நூலில் சிறு / பெறு தவறு இருந்தால் எல்லாம் வல்ல இறைவனும் எம் பாட்டனார் எம் பெருமான் முஹம்மது நபி ( ஸல் ) , முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி ) , கருனைகடல் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் ( ரலி ) அவர்களும்  இதை படிக்கும் தாங்களும் மன்னித்து அருள வேண்டுகிறேன். 

கருனைகடல் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் , நாகூர் ஆண்டகை நாயகத்தின் அருள் மழையில் நினைந்த பக்த கோடிகள் ஏராளாம். அதில் தாராள மனம் கொண்ட எத்தனையோ கோடிகளில், எனது நண்பர் _________ அவர்கள் இந்த நல்ல நூலை தனது பொறுப்பில் எடுத்து கொண்டு தனது சொந்த செலவில் வெளியிட்டார், அன்னாரின் குடும்பத்துக்கு எல்லாம் வல்ல அல்லா சகல சவ்பாக்கியத்தையும் தந்தருளுவானாக ஆமீன். மேலும் இதைனை மொழி மாற்றி / பெயர்த்து கொடுத்த எனது அன்பர் ______ அவர்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல அல்லா சகல சவ்பாக்கியத்தையும் தந்தருளுவானாக ஆமீன். மேலும் இதைனை இதனை அச்சிட்ட / எழுத்து பிழையை சரி செய்த ________ பிரிண்டர்ஸ் நிர்வாகத்திற்கும் நன்றி கூறி இந்த வரலாற்று கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன்...

இவ்வுயர்ந்த பணியின் நற்கூலியை எனது உடலுயிர் அனைத்துக்கும் சொந்தமான எனது பாட்டனார் சாஹிப்ஜாதா ஹஜ்ரத் செய்யது மக்தும் கலிபா சாஹிபிற்க்கும், எனது சகோதரி செய்தா தாஹிரா அவர்களின் ருஹூக்கு அளிக்குமாறு எல்லாம் வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன். 

ப்ரியமுடன்.
செ மு கலிபா சாஹிப் காதிரி 


பின் குறிப்பு : இன்னமும் இந்த புத்தகம் முழுமை அடையவில்லை. இன்னும் பல வேலைகள் முடிக்கபடாமல் இருக்கின்றன , குறிப்பாக எழுத்து பிழை சரி செய்தல் , வாக்கியம் அமைத்தல் , மேற்கோள் விளக்கம் , வார்த்தை விளக்கம், மதிப்புரை மற்றும் பலதரப்பட்ட வேலைகள் முழுமையடாமல் இருப்பதால் முழுமையடைந்தபின் புத்தக வடிவில் வாங்கி படிக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.




யா காதிர் முராத் ஹாசில் !!



ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்துஸ் சாஹிப்


ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்துஸ் சாஹிப் 

இந்தியாவில் தற்போதுள்ள உத்திரபிரதேசத்தை சார்ந்துள்ள சரித்திர புகழ் மிக்க அலகாபாத் நகருக்கு அறுபத்தி மூன்று மைலுக்கு தெற்கே குன்றுகளுக்கு நடுவே ஹிஜ்ரி 75 ம் ஆண்டு மாணிக்கபூர் நகரம் உருவனாதாக சரித்திர நூல்கள் தெரிவிக்கின்றன. அரபி, பார்சி, ஆப்கான், உர்து, காஷ்மீரி மொழிகள் பரவலாக பேசப்பட்டதாகவும் அறிவும் ஆத்மீகமும் மார்க்க கலைகளும் நிரம்பிய பல மார்க்க அறிவு ஜீவிகள் சுவாசம் இங்கே உள்ள காற்றில் கலந்து இருப்பதாகவும், அந்நகரில் அந்நாளில் மூலை முடுக்குகளில் எல்லாம் கிரா அத்தும் , திக்ரும், சன்மார்க்க சொற்பொழிவுகளும் கேட்டு கொண்டே இருந்தன.. இந்திய பேரரசன் பெரோஜ்ஷா துக்லக்கின் கனவு நனவாகிய பட்டினமாக மாணிக்கபூர் திகழ்ந்த்ததாக சரித்திர குறீயிட்டில் உள்ளது.. 

துக்ளக் அரசரின் மரியாதை அழைப்பை ஏற்று சங்கை மிக்க எம் பெருமான் முஹம்மது நபி ( ஸல் ) வழி தோன்றழாகிய  ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்கள்அன்னாரின் முதாதையர்கள் சுல்தான் பெரோஜ் ஷா துக்ளக் காலத்தில் மார்க்க பேருரை ஆற்ற மாணிக்கபுரில் தங்கவைக்க பட்டவர்கள். ஹஜ்ரத் செயதினா சையது ஹசன் குத்துஸ் ( ரலி ) அவர்கள். பக்தாத் நகரத்தை சேர்ந்த அவர்கள் ஹஜ்ரத் செய்தின முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி ( ரலி ) அவர்களின் ஐந்தாம் தலைமுறையில் தோன்றியவர்கள்.சங்கை மிக்க எம் பெருமான் முஹம்மது நபி ( ஸல் ) வழி தோன்றளுடையவர்களும், நகரத்தில் நன் மதிப்பு பெர்ர்வர்க்களுமாகிய ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்களும் அன்னவர் இல்லத்தரசி செயிதத்து பாத்திமா அவர்களும் வாழ்ந்து வந்த சொர்க்க பூமி அது.  

பெரும் பேறுகள் பெற்றிருந்தும் அவர்களுக்கு பிள்ளை பேரில்லை.   மார்க்கப்பணி புரிவதும் சுய ஜீவனத்திற்காக தொழில் புரிவதும்  ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்களின் வழக்கமாயிருந்தது.  

ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்கள் தமது கிராமத்தாரிடையே பெரிதும் மதிக்கபட்டர்கள்.  ஆழ்ந்த சிந்தனையும் தெளிவான கண்ணோட்டமும் , மார்க்க நல்லொழுக்கமும் , பரந்த மனிதாபிமானமும் படைத்த  ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்கள் இந்தியாவில் புனித இஸ்லாத்தை தங்கள் அறப்பணிகளாலும் அன்பு பிரச்சாரத்தாலும் நிறுவி வந்தார்கள்.  

ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்களின் இதயம் மதமாச்சர்யங்களையும் அதனால் விளையும் குரோதங்களையும் வெறுத்தது.. உண்மையான பக்தி என்பது மனிதன் இறைவன் அளவில் நெருங்குவதாகுமே  தவிர தன்னுடைய கொள்கைகளை பிறர் மீது திணிப்பது அல்ல என்று நன்கு உணர்ந்து இருந்தார்கள்.

மன்னர் பெரோஜ்ஷா துக்ளக்கின் கனவு நனவாகி ஒரு சில நூற்றாண்டு காலம் தீன் முழக்கம் செய்தாலும் கடந்த சிறு காலமாய் நிலைமை பழைய இருட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தது.. முஸ்லிம் அரசர்கள் பலர் குன்றிவிட்டனர், துக்ளக் போன்ற மார்க்க பற்றுள்ள மன்னர்கள் மறைந்து விட்டனர்.

ஆன்மீகவாதிகளும் சூபியாக்களும் ,பக்தர்களும் போதிய ஆதரவு இல்லாததால் மாணிக்கபூரை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். திட்டமிட்ட சன்மார்க்க போதனைகள் குறைந்து விட்டதால் மக்களிடையே கெட்ட எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. இவற்றை எல்லாம் கண்டு ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்துஸ் ( ரலி ) மனம் வெதும்பினார்கள். மனிதர்கள் தீய உணர்ச்சி நிரம்பியவர்காளாகவே படைக்கபட்டிருக்கீரார்கள் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களை காப்பாற்ற முடியாது என்ற குர்ஆன் ஆயத்தினை ஓதி கண்ணீர் மல்க து கேட்பார்கள்.

தீனை சீர்திருத்த இறைவன் தன நல்லடியார்களை மக்கள் முன் வெளிபடுத்தி சரி செய்வான் என்ற பெரியார் ஒருவரின் வாக்கை எண்ணி ஏங்குவார்கள். ஒவ்வொரு தொழுகையிலும் இறைவனிடம் கை ஏந்தி அத்தகைய உன்னத மகானை அனுப்பி வை என கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.  இத்தகைய சந்தர்பத்தில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரார்த்தனையை அங்கிகரித்துகொண்டான் போலும்...