ஹஜ்ரத் செய்யது
ஹசன் குத்துஸ் சாஹிப்
இந்தியாவில் தற்போதுள்ள உத்திரபிரதேசத்தை சார்ந்துள்ள சரித்திர புகழ் மிக்க அலகாபாத்
நகருக்கு அறுபத்தி
மூன்று மைலுக்கு
தெற்கே குன்றுகளுக்கு நடுவே ஹிஜ்ரி
75 ம் ஆண்டு மாணிக்கபூர் நகரம் உருவனாதாக சரித்திர
நூல்கள் தெரிவிக்கின்றன. அரபி, பார்சி, ஆப்கான், உர்து, காஷ்மீரி மொழிகள் பரவலாக
பேசப்பட்டதாகவும் அறிவும்
ஆத்மீகமும் மார்க்க
கலைகளும் நிரம்பிய
பல மார்க்க
அறிவு ஜீவிகள்
சுவாசம் இங்கே உள்ள காற்றில்
கலந்து இருப்பதாகவும், அந்நகரில் அந்நாளில் மூலை முடுக்குகளில் எல்லாம் கிரா அத்தும் , திக்ரும், சன்மார்க்க சொற்பொழிவுகளும் கேட்டு
கொண்டே இருந்தன..
இந்திய பேரரசன்
பெரோஜ்ஷா துக்லக்கின் கனவு நனவாகிய
பட்டினமாக மாணிக்கபூர் திகழ்ந்த்ததாக சரித்திர
குறீயிட்டில் உள்ளது..
துக்ளக் அரசரின் மரியாதை அழைப்பை
ஏற்று சங்கை மிக்க எம் பெருமான் முஹம்மது
நபி ( ஸல் ) வழி தோன்றழாகிய ஹஜ்ரத் செய்யது
ஹசன் குத்தூஸ்
அவர்கள்அன்னாரின் முதாதையர்கள் சுல்தான் பெரோஜ்
ஷா துக்ளக்
காலத்தில் மார்க்க
பேருரை ஆற்ற மாணிக்கபுரில் தங்கவைக்க பட்டவர்கள். ஹஜ்ரத் செயதினா சையது ஹசன் குத்துஸ்
( ரலி ) அவர்கள்.
பக்தாத் நகரத்தை
சேர்ந்த அவர்கள்
ஹஜ்ரத் செய்தின
முஹையதீன் அப்துல்
காதர் ஜீலானி
( ரலி ) அவர்களின் ஐந்தாம் தலைமுறையில் தோன்றியவர்கள்.சங்கை மிக்க எம் பெருமான் முஹம்மது
நபி ( ஸல் ) வழி தோன்றளுடையவர்களும்,
நகரத்தில் நன் மதிப்பு பெர்ர்வர்க்களுமாகிய ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்களும் அன்னவர் இல்லத்தரசி செயிதத்து பாத்திமா
அவர்களும் வாழ்ந்து
வந்த சொர்க்க
பூமி அது.
பெரும் பேறுகள் பெற்றிருந்தும் அவர்களுக்கு பிள்ளை பேரில்லை. மார்க்கப்பணி புரிவதும் சுய ஜீவனத்திற்காக தொழில் புரிவதும் ஹஜ்ரத் செய்யது
ஹசன் குத்தூஸ்
அவர்களின் வழக்கமாயிருந்தது.
ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ்
அவர்கள் தமது கிராமத்தாரிடையே பெரிதும்
மதிக்கபட்டர்கள். ஆழ்ந்த சிந்தனையும் தெளிவான கண்ணோட்டமும் , மார்க்க நல்லொழுக்கமும்
, பரந்த மனிதாபிமானமும்
படைத்த ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் அவர்கள்
இந்தியாவில் புனித இஸ்லாத்தை தங்கள்
அறப்பணிகளாலும் அன்பு பிரச்சாரத்தாலும் நிறுவி
வந்தார்கள்.
ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ்
அவர்களின் இதயம் மதமாச்சர்யங்களையும் அதனால்
விளையும் குரோதங்களையும் வெறுத்தது.. உண்மையான பக்தி என்பது மனிதன்
இறைவன் அளவில்
நெருங்குவதாகுமே தவிர தன்னுடைய கொள்கைகளை பிறர் மீது திணிப்பது அல்ல என்று நன்கு உணர்ந்து இருந்தார்கள்.
மன்னர் பெரோஜ்ஷா துக்ளக்கின் கனவு நனவாகி ஒரு சில நூற்றாண்டு காலம் தீன் முழக்கம் செய்தாலும் கடந்த சிறு காலமாய் நிலைமை
பழைய இருட்டுக்கு திரும்பி கொண்டு
இருந்தது.. முஸ்லிம்
அரசர்கள் பலர் குன்றிவிட்டனர், துக்ளக் போன்ற மார்க்க
பற்றுள்ள மன்னர்கள் மறைந்து விட்டனர்.
ஆன்மீகவாதிகளும் சூபியாக்களும் ,பக்தர்களும் போதிய ஆதரவு இல்லாததால் மாணிக்கபூரை விட்டு
வெளியேற ஆரம்பித்தனர். திட்டமிட்ட சன்மார்க்க போதனைகள் குறைந்து
விட்டதால் மக்களிடையே கெட்ட எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. இவற்றை
எல்லாம் கண்டு ஹஜ்ரத் செய்யது
ஹசன் குத்துஸ்
( ரலி ) மனம் வெதும்பினார்கள். மனிதர்கள் தீய உணர்ச்சி
நிரம்பியவர்காளாகவே படைக்கபட்டிருக்கீரார்கள் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களை காப்பாற்ற முடியாது என்ற குர்ஆன் ஆயத்தினை
ஓதி கண்ணீர்
மல்க து ஆ கேட்பார்கள்.
தீனை சீர்திருத்த இறைவன் தன நல்லடியார்களை மக்கள்
முன் வெளிபடுத்தி சரி செய்வான்
என்ற பெரியார்
ஒருவரின் வாக்கை
எண்ணி ஏங்குவார்கள். ஒவ்வொரு தொழுகையிலும் இறைவனிடம் கை ஏந்தி அத்தகைய
உன்னத மகானை அனுப்பி வை என கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள். இத்தகைய சந்தர்பத்தில்தான் எல்லாம்
வல்ல அல்லாஹ்
அன்னாரின் பிரார்த்தனையை அங்கிகரித்துகொண்டான் போலும்...
No comments:
Post a Comment