காணிக்கை வாங்கிய யூசுபு நாயகம்
நாகப்பட்டினம் சரித்திர பிரசித்தி பெற்ற முறைமுகம் அங்கு இருந்தது. ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் நாட்கணக்கில் தியானங்கள் மேற்கொள்ளும் போது ஹஜ்ரத்
செய்யது முஹம்மது
யூசுப் தாதா ஆண்டகை அவர்கள்
சீடர்களுடன் மார்க்க
சொற்பொழிவு ஆற்ற செல்வார்கள். அன்று ஒரு நாள் நாகப்பட்டினம் சென்ற போது சின்ன ஆண்டகையை கண்ட மக்கள் பேரின்பம் அடைந்தனர். மிக சிறந்த விரும்தோம்பல் அளித்தனர். ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்களுக்கு வைத்திருந்த காணிக்கை பொருட்களையும் அளித்தனர்.
ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப்
தாதா ஆண்டகை
அவர்கள் யோசித்தார்கள். தங்கள் தந்தை சேர வேண்டிய
பொருள்தானே யோசிக்காமல் ஏற்று கொள்ளுங்கள் என உடனிருந்த பக்கிர்மார்கள் கூற பெற்று கொண்டு
தந்தையிடம் வந்து நடப்பை கூறினார்கள். ( அந்த காணிக்கை
தண்ணீரில் தாழ்ந்து
கொண்டிருந்த கப்பலின்
துவராத்தை தன் கண்ணாடியை எறிந்து
அடைக்க, காப்பற்றபட்ட கப்பலின் சொந்த காரர்கள் ஹஜ்ரத்
நாகூர் ஆண்ண்டகை
அவர்களுக்காக வைத்திருந்த காணிக்கை அது )
சிறிது நேரம் கண் மூடி யோசித்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் மெளனமானார்கள். மகனே !! என்ன காரியம் செய்துவிட்டீர் !!எனக்கு
வரும் காணிக்கை
பொருளை கொண்டு
நீறும் உமது சந்ததியினரும் வாழ்வீர்
என்ற கற்பனையை
மாற்றும் படி எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் கெஞ்சி கேட்டு
வருகிறேன். உலக தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றி வாழக்கூடிய கீமியா ரகசியத்தை நாம் உமக்கு
கற்று தர நினைத்த இந்த வேளையில் இப்படி
செய்துவிட்டீரே !! இறை கற்பனை நிறைவேறிவிட்டது.
இதற்காக நீர் ஆயசபடதேவையில்லை.. அல்லா போதுமானவன், எனக்கென்று வரபோகின்ற காணிக்கை
பொருட்களுக்கு முடிவே
கிடையாது , அதை நீயும்
உமது சந்ததியினர் மட்டுமே அனுபவிக்க உரிமை உண்டு, மற்றார் அனுபவித்தால் அல்லாஹ்வின் சகல கோபத்திற்கு ஆளாகுவார்கள் என நவின்றார்கள்.
No comments:
Post a Comment