Pages

Friday, June 8, 2012

காட்டினிலே திக்ர் ஒலி


காட்டினிலே திக்ர் ஒலி  

மேற்கு மலை தொடர்ச்சி பக்கமாய் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தனது சீடர்களுடன் பயணத்தை தொடர்ந்தார்கள். எப்போதும் தனிமைய விரும்புகிற ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் கூட்டத்தினரை விட்டு தனித்தே நடந்து செல்வார்கள். சில சமயம் எல்லோரையும் ஒரு இடத்தில் இருக்க செய்து விட்டு வெகு தொலைவு ஒதுங்கி சென்று நாட்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்தது விடுவார்கள். துறவிகளான தமது சீடர்களுக்கு வெவ்வேறு தியான முறைகளையும் தியான வழிகளையும் தரிக்காக்களையும் கற்று கொடுத்தார்கள். தமது சீடர்களுக்கு அவரவர் இயல்புக்கு ஏற்ற அனுபவத்திற்கு ஏற்ப வெவ்வேறு தரிக்காக்களில் தீட்சை அளித்து செயற்பட ஏவியிருந்தார்கள். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் ஏகாந்த தியானத்தில் இருக்கும் போது சீடர்கள் தனி தனிக்குழுவாய் பிறந்து திக்ரில் லயித்து இருப்பார்கள். காடு முழுக்க அல்லாஹ்வின் திரு நாமங்கள் ஒலித்து கொண்டு இருக்கும். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களின் திக்ரினை அந்த காட்டில் அல்லாஹ்வின் அனைத்து படைப்பினங்களும் செய்து கொண்டு இருக்கும் என ஒரு புலவர் பாடியுள்ளார். 

No comments:

Post a Comment