முடங்கிய சிறுமியின் துயர்
தீர்த்த வள்ளல்
அந்நாளில் பாரசீக தலை நகர் உலக பெருனாடுகளில் ஒன்றாகவும் கலை நயம், கல்வி பெருக்கம் நெருக்கம் நிறைந்த நகராமாக
விளங்கியது. அப்போது
அந்நகரை ஷாஹா என்ற பரம்பரையினர் ஆண்டு வந்தனர். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் மகிமை அறிந்த மன்னர்
தம் பரிவாரங்களுடன் சென்று நாயகத்தை வணங்கி
சீடர்களுடன் தம் மாளிகையில் விருந்துன்னும்படி மன்றாடினான்.
ஒப்பு கொண்ட நாயகம் அவர்கள்
ஒரு நாளில்
தனது சீடர்களுடன் சென்றார்கள். விருந்துக்கென பல தரப்பட்ட
உணவு வகைகள்
வைக்கப்பட்டன.
பாரசீக முறைப்படி உணவு வகை தட்டின் மீது பெரும் மூடி போட்டு முடி கொண்டு வருவர்.
மன்னர் தன் கையினாலேயே ஏறும் பாத்திரத்தை மூடி போட்டு மூடி கொண்டு வந்தான்.
நாயகம் முன் வைத்து கண்ணீர்
மல்கினான். மூடியை
திறந்த நாயகம்
வியந்தார்கள். அதனுள்
சகல வியாதிகளையும் கொண்ட சிறுமி
ஒருத்தி இருந்தால். கண் இல்லை பார்க்க. நாவு இல்லை பேச, காத்து இல்லை கேட்க, உடம்பெல்லாம்
ரோகம், கையெல்லாம் ஊனம் ஒரு தாம்பாளத்தில் முடங்கி
கிடந்தாள்.
அருமை ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் தன் கையால் தடவி ஓதி அவளை தொட்டார்கள். அவளது வியாதி தொலைந்து
சற்று முன் வரை பார்க்கவே அருவருப்பான சிறுமி
கண் கூசும்
அழகு பெற்று
வயதுக்கேற்ற வளர்ச்சி
பெற்று எழுந்து
சென்று தம் தாய் தந்தையரை
கட்டி தழுவினாள். தம் மகளை காத்த ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகைக்கு நன்றி சொல்லி
பணிந்தார் மன்னர்.
தாம் விருந்துக்கு ஒப்பு கொண்டதே
சிறுமிக்கு அருள் பாவிக்கவே என கூறிய நாகூர்
ஆண்டகை பின்னர்
அங்கிருந்து சென்றார்.
No comments:
Post a Comment