Pages

Friday, June 8, 2012

அதிசயம்!! வெட்டுண்ட உடல் ஒன்றாக சேர்ந்தது ..


அதிசயம்!! வெட்டுண்ட உடல் ஒன்றாக சேர்ந்தது .. 

ஒளிநுழையா காடுகளின் மத்தியில் மரங்களின் அசைவுகளும் விலங்கினங்களின் ஒலியையும் தவிர திடீரென் மனித குரலும் கேட்டது. ஹஜ்ரத் நாயகம் திரும்பி பார்த்த போது நான்கு திருடர்கள் வாளேந்தி நின்று , இருப்பதை கொடுக்கிறாயா இல்லை வெட்டி வீழ்த்தவா ? என்று கூறினார், உடுத்திய உடையை தவிர எங்களிடம் வெறும் ஏதும் இல்லை என்று நாயகம் கூறியதும், உடமையை கழற்றி கொடு இல்லை எனில் உயிரை எடுத்து விடுவோம் என மிரட்டினர். ஹஜ்ரத் நாயகம் மறுக்கவே ஓங்கி வெட்டினர்.. ஹஜ்ரத் நாயகம் மீது வெட்டியா வெட்டுகளில் எல்லாம் திருடர்கள் மீதே வாழ் பட்டது. திருடர்கள் வீழ்ந்த்தனர். திருடர்களின் அலறல் குரல் சிறுது தூரத்தில் இருந்த அவர்கள் குடும்பத்தின் காதில் விழுந்தது, திருடர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். குடும்பம் கூட்டமாக வந்து அந்த கோர காட்சியை கண்டனர். உயிரும் போகாமல் உடல் வேதியில் வாடும் திருடர்கள் வாயிலாக நடந்ததை கேட்டறிந்த மக்கள் ஹஜ்ரத் நாயகம் அவர்களிடம் குடும்பம் சகிதம் மண்டியிட்டு மன்னித்தருள வேண்டினர். துன்பம் தந்தவருக்கு இன்பம் அளிக்கும் ஹஜ்ரத் நாயகம் அவர்கள் இறைவனிடம் மன்றாடினார்கள். பார்ப்பவர்கள் வியப்புறும் வண்ணம் திருடர்களின் வெட்டுண்ட உறுப்புகள் உடலோடு வந்து சேர்ந்தன.. உடலில் காயமின்றி எழுந்து ஹஜ்ரத் நாயகத்தின் பாதம் பணிந்தார்கள். திருடர்களை திருத்தி நல உபதேசம் செய்து இஸ்லாத்தின் நேர்மைகளையும் உண்மைகளையும் கற்று தந்தார்கள். பின்பு அவர்களும் சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு குருவை தேடி பயணம் தொடர்ந்தார்கள்.




No comments:

Post a Comment