Pages

Friday, June 8, 2012

கடலில் மூழ்கிய கப்பல் திரும்பி வந்த அதிசயம்


கடலில் மூழ்கிய கப்பல் திரும்பி வந்த அதிசயம் 

மக்காவில் தங்கியிருந்த நேரம் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகைக்கு சுலைமான் பின் ரவூப் என்ற செல்வந்தர் நாகூர் ஆண்டகையின் சிறப்பை அறிந்து பணிவிடை செய்து அன்னாரின் அருகிலேயே இருப்பார். கப்பல் வர்த்தகரான அவருக்கு ஒரு நாள் செய்தி வந்தது. இரானுக்கு என்ற அவரது கப்பல் கடலில் மூழ்கிவிட்டது, செய்தி கேட்ட சுலைமான் பின் ரவூபோ பதறி துடிக்கவில்லை. அமைதியாக ஆண்டகைகளின் அமைதியை கெடுக்க வேண்டாம், போங்கள் ! என வந்தவர்களை விரட்டினர்.

மறுநாள் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களிடம் ஒரு கோரிக்கை  வைத்தார். எஜமானே தங்கள் திரு கரத்தால் இந்த புனித நகரில் பள்ளி ஒன்று கட்ட வேண்டும், அதற்கான செலவுக்காக என் பொருளை தாங்கள் பயன் படுத்த வேண்டும் .. செவிமடுத்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள், இப்னு ரவூப் அவர்களே , கப்பல் மூழ்கிவிட்ட விஷயம் உம்மை பாதிக்கவில்லையா ? மேற்கொண்டு என் செலவு செயகீறீர் ? என வினவினார்கள்.

" ஆண்டகையின் சமுகத்தில் எவரும் நஷ்டமடைவதில்லை " என் கோரிக்கையை தாங்கள் தயவு செய்து நிறைவேற்றுங்கள் என கண்ணீர் விட்டு கேட்டார் ரவூப். " சரி ஏற்பாடு செய்யும் . ஆனால் அதற்கான செலவுகளை நீர் செய்ய கூடாது, பணம் தேவைப்படும் போது நான் உட்காருகின்ற விரிப்பின் கீழ் கை விடும், போதிய பணம் கிடைக்கும் அதை கொண்டு நிறைவேற்றும் என்றார்கள்.

பள்ளி வேலை மிக துரிதமாக நடந்து கொண்டு இருந்த போது இப்னு பின் ரவூபின் பணியால் ஓடி வந்தான். மூழ்கிப்போன கப்பல் வர்த்தக பொருளுடன் ஜித்தா வந்து இருப்பதை கூறினான். இந்த சம்பவத்திற்கு ஆண்டகை தான் காரணம் என புரிந்து கொண்ட அவர், அந்த கப்பலை ஆண்டகைக்கு சொந்தமாக்கி பத்திரம் முடித்து கொண்டு விரைந்து வந்தார். 
" ஆண்டகையின் சமுகத்தில் எவரும் நஷ்டமடைவதில்லை "இந்த கப்பலை காணிக்கையாக தாங்கள் ஏற்க வேண்டும் என பத்திரத்தை ஆண்டகை முன் வைத்தார். வள்ளல் நாயகம் சிரித்தார்கள்.

அதே நேரத்தில் யாசகன் ஒருவன் ஆண்டகைகளிடன் இறைஞ்சி நின்றான். கருணை நாயகம் அப்பாத்திரத்தை அவனிடம் கொடுத்தார்கள். பின் இன்பு பின் ரவூபிடம் கூறினார்கள். எல்லாம் வல்ல இறைவன் உன் உள்ளம் அறிவான், மென்மேலும் பல செல்வத்தை உமக்கு தந்தருள்வான் என துஆ செய்து மக்கா திரும்பினார்கள். 

நாவு தண்ணீர் கேட்கும் வரை தக்பீர் சொல்லி கொண்டே இருந்தார்கள். கால்கள் சோரும் வரை தவாபு சுற்றினார்கள்,பின்பு லாகூரில் வளர்ந்து கொண்டு இருக்கும் தன மகனை பற்றிய நினைவில் மூழ்கினார்கள். 

No comments:

Post a Comment