Pages

Friday, June 8, 2012

ரிக்வத் உணவு


ரிக்வத் உணவு 

மேற்கு நோக்கி புறப்பட்ட ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் காடு மலை கடந்து சீடர்களுடன் லாகூர் வந்து சேர்ந்தார்கள், ஆண்டகையின் சிறப்பை உணர்ந்த அம்மக்கள் புண்ணிய நபரின் பொற்பாதம் வணங்கி வரவேற்றனர். அந்நகரை ஆண்டு வந்த மன்னன் மாபெரும் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்து நிதமும் தங்கள் வீட்டில் சீடர்களுடன் விருந்துண்ணவும் வேண்டினார். ஆடம்பரத்தையும் அந்நிய பொருளையும் விரும்பாத ஆண்டகை அவர்கள் அதை ஏற்று கொள்ள வில்லை. ஒவ்வொரு மனிதனின் உணவும் அல்லாஹ்வின் கையில் இருக்கிறது. எங்கள் உணவை அவன் கொடுப்பன், இந்த ரிக்வத் வழியாய் தரம் சித்தம் கொண்டுள்ளான் என சொல்லி தம் வசம் இருந்த அற்புத திரு வோட்டிலிருந்தே வேண்டிய உணவை சீடர்களுடன் சாப்பிட்டு வந்தார்கள். 

No comments:

Post a Comment