செரித்த ஒட்டகம்.. உயிர்பித்த அதிசயம்
தமது சீடர்களுக்கு
சொந்தமான ஒட்டகம்
ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டு
இருந்தது. அதை மலை மேல் வசித்து வந்த மக்கள் இரவோடு
இரவாக பிடித்து
அறுத்து புசித்து
விட்டனர். மறுநாள்
புறப்பட ஆயத்தமான
சீடர் ஒட்டகத்தை காணமல் திகைத்தார். ஆண்டகைக்கு தெரிவித்தார். மேலும் சீடர் அம்மலை வாழ் மக்களிடம் ஒட்டகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா எனவும்
வினவினார். தெரியாது
எனவும் அவர்கள்
மறுத்து விட்டார்கள். இதை கண்டு சிரித்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் , மேய்ந்து கொண்டிருந்த ஒட்டகமே.. அல்லாவின் மீது ஆணை.. உடனே என்னிடம்
வா என்றார்கள். மலை வாழ் மக்களின் வயிரிளிருந்து ஒரு சத்தம்
வந்தது. அருமை நாயகமே நான் எப்படி வருவது
.. வழி ஏதும் இல்லையே என்று..
என்று இறைச்சி
துண்டுகளாய் அம மக்கள் கால் வழியே வந்தது.
சிரித்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் அவற்றை
குவியலாக்கி அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு
எழுந்திரு என்றார்கள். இறைச்சி துண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது , ஒட்டகம் உயிர் பெற்றது.
இதனை கண்ணுற்ற மலை வாழ் மக்கள் நாகூர்
நாயகத்தின் பாதம் பணிந்து , உபதேசம் ஏற்று இஸ்லாத்தை தழுவினார்கள். இவ்வாறாக அனைத்து மக்களுக்கு உபதேசித்து உண்மையை பேன செய்து இஸ்லாத்தை நிலை நாட்டி
கொண்டே மாணிக்கபூர் வந்து சேர்ந்தார்கள்.
No comments:
Post a Comment