மாணிக்கபூர் வருகை
ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை வருகையை
பற்றி முன்பே
அறிந்து இருந்த
நகர மக்கள்
கோலாகல வரவேற்பளித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் நாகூர்
ஆண்டகையின் பெற்றோர்கள் நீண்ட நெடுநாட்களுக்கு பின் .கண்ட தம் மைந்தரை கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் பெருகினர். ஆன்மீக தலைவரனான
நாகூர் ஆண்டகையை
வலிமாரும் உலமாக்களும் தரிசித்து மார்க்க
அறிவை பெற்று
சென்று கொண்டு
இருந்தனர். ஒரு நாள் தமது சீடர்களை அழைத்து
தரீக்காக்களின் படி சிறு சிறு க்குழுவாய் அமைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நான்கு பேரை கலிபாக்களாக நியமித்தார்கள். திசைக்கு ஒருக்குழுவாய் புறப்படுங்கள். எங்கும் இறை நாமம் ஒலிக்க
செய்யுங்கள். அல்லா உங்களுக்கு ரஹ்மத்
செய்வானாக என வாழ்த்தி விட கொடுத்தார்கள். கள்ளர்களாய், கொலைகாரர்களாய் , மிருங்கன்களாய் வாழ்ந்த வன் நெஞ்சினரை மார்க்க அறிவு மேதைகளாய் மாற்றிய ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
கிரமாத்தை என்ன வென்று சொல்வது.
தனது சீடர்கள்
மூலம் எண்ணிலடங்கா மனிதர்கள் இஸ்லாம்
தழுவபோவதை தன் மனக்கண்ணில் கண்டு அகம் மகிழ்ந்தார்கள்.
No comments:
Post a Comment