பிணி நீக்கும் சங்கிலி
மேலும் இன்னொரு அறைக்கு போனார்கள். அங்கு அறுபது
அடி நீளமுள்ள
இரும்பு சங்கிலியை காட்டி இது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் சுல்தான்
ஸ்கந்தர் தில்கருனைக்கு தரப்பட்டது. இதனிலிருந்து ஒரு பகுதியை
உமக்கு தந்தருள
ஆண்டவன் உத்தரவிட்டுள்ளன்,
மக்கள் பிணியை
தீர்க்கும் நீர், இந்த சங்கிலியை கழுவி தண்ணீர்
பருக சொல்லும்
அவர்களுக்கு எல்லாம்
வல்ல அல்லா சிபா தருவான்
என நல்கினார்கள். பின்பு ஒரு காலத்தில் ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் இந்த சங்கிலியை தனது மகனார் ஹஜ்ரத்
செய்யது முஹம்மது
யூசுப் சாஹிப்
வசம் கொடுத்தார்கள். அந்த சங்கிலியானது இன்னமும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது
யூசுப் சாஹிப்
தர்கா செரிபில்
காணப்படுகிறது.
No comments:
Post a Comment