மந்திரகாரனுக்கு மதி புத்தி
நாகரிகமற்ற காட்டில் மந்திர தந்திரம்
அறிந்த மந்திரக்காரன் ஒருவன் மமதையில் வாழ்ந்துகொண்டு இருந்தான். மந்திரங்களை ஏவி
பாமரர்களை ஏமாற்றியும் கொண்டு இருந்தான். அவனும் அவனது கூட்டத்தாரும் நெருப்பை
வணங்குவர்களாக இருந்தனர். ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை அவர்கள் காட்டில் இருப்பதை அறிந்து அந்த காடு தமக்கு சொந்தம்
என்றும் அதில் வேற்று மதத்தினர் தங்குவதன் மூலம் தனது ஆராதனை இடையுறு பெற்று
விட்டதாகவும் அதனால் காட்டை விட்டு உடனே வெளியேறும்படியும் மேலும் இடையுர்றின்
காரணமாக தனக்கு ஒரு பெரும் தொகை கொடுக்க வேண்டும் அதிகாரத்துடன் கூறினான். இதை
கேட்டு சிரித்த நாயகம் அவர்கள். நாங்கள் இஸ்லாமியர்கள். உருவமில்லா இறைவனை
வணங்குபவர்கள். அவனை பூசிக்க பொருட்கள் தேவையில்லை, நாங்கள் இருக்கிமிடம் எப்போதும் சுத்தமாகவே
இருக்கும் என கூறினார்கள். உடனே மந்திரவாதியோ மமதையில் பேசுகிறாயா என் சக்தியைவிட்டு உம்மை அழித்து காட்டட்டுமா
என்றான்,அதற்க்கு இறைவன் சக்திக்கு முன் எதுவும்
நிற்காது என்றார்கள் ஆண்டகைகள். கடும் சினம் கொண்ட அவன் தனது கைகம்பை தரையில்
போட்டான் அது பெரும் நாகமாக மாறி விஷ மூச்சு விட்டது, அந்த மூச்சு காற்றால் பச்சை செடிகள்
எல்லாம் எரிய வல்லதாக இருந்தது. கருணை நாயகம் அந்த நாகத்தை ஒரு பார்வை
பார்த்தார்கள் அது மீண்டும் கைகம்பாக மாறியது. திகைத்த மந்திரவாதி அருமை
நாயகத்தின் கண்களை நோக்கினான். உண்மை மார்க்க ஒளி அவனது இதயத்தை துளைத்தது. மனம் மாறி தனது கூடத்தருடன்
நாயகத்தின் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டான். மன்னிதருளிய நாயகம் புனித மார்க்கம்
இஸ்லாத்தை எடுத்துரைத்து அன்னாருக்கும் அன்னாரின் கூட்டத்க்கும் கலிமா கூறி
இஸ்லாத்தை நாட்டி மார்க்க அறிவு புகட்டி நல உபதேசங்களை எடுத்துரைத்தார்கள்.
No comments:
Post a Comment