Pages

Friday, June 8, 2012

ஷாகுல் ஹமீத் பெயர் காரணம்


ஷாகுல் ஹமீத் பெயர் காரணம்  

குவாலியர் நகரை ஒட்டியுள்ள எளிய பள்ளிவாயிலில் தங்கியிருந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டவர் அவர்கள் , தனக்கு வேண்டிய மார்க்க குருவை தனக்கு காட்டும்படி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கேட்டார்கள். அதுவரை உண்ணாமல் உறங்காமல் அல்லாஹ்வை வணங்குவது என வைராக்கியம் கொண்டார்கள். பல வாரங்கள் ஓடின, மாதங்கள் கடந்தன. ஒரு நாள் அதிகாலை வேளையில் ஹஜ்ரத் நாகூர் ஆண்டவர் அவர்கள் சஜ்தாவில் இருந்தார்கள். ஒரு அசரீர குரல் ஒலித்தது. அருமை ஷாகுல் ஹமீதே , எழுந்திரும் , உமது வணக்கத்தை அங்கீகரித்து கொண்டோம், உமக்கு ஷாகுல் ஹமீத் என்ற கருணை நாமத்தை சூட்டயுள்ளோம். இந்நகரத்தில் உள்ள ஹஜ்ரத் செய்யது முஹம்மது கெளது ( கத்த ) என்பவர் உமது ஆசான், அவரிடம் செல்க. என்ற சத்தம் கேட்டதும் , ஹஜ்ரத் நாகூர் ஆண்டவர் எழுந்து பார்த்தார்கள். ஒருவரையும் காணோம். மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க அல்லாஹ்வுக்கு நன்றி கூறி குவாலியர் நகரம் நோக்கி நடந்தார்கள்.

அதிகாலை தொழுகை முடித்து இறை நேசர்கலான தமது சீடர்களுக்கு நல் கருத்து விளக்கம் நல்கி கொண்டிருந்த ஹஜ்ரத் செய்யது முஹம்மது கெளது ( கத்த ) அவர்கள் சட்டென்று மவுனமானர்கள். அந்த அமைதியை கிழித்து கொண்டு ஒரு அசரீர குரல் ஒலித்தது, " அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் குருவாய் அமரகூடிய பேற்றை பெற்று இருப்பவர் ஹஜ்ரத் செய்யது முஹம்மது கெளது ஷத்தாரியாயிருக்கும் " குரல் கேட்ட எல்லோரும் திகைத்து சுற்றும் முற்றும் நோக்கினர். குவாலியர் எஜமான் ஹஜ்ரத் செய்யது முஹம்மது கெளது ( கத்த ) கூறினார்கள். நீங்கள் இப்போது செவிமடுத்தது அல்லாஹ்வின் குரலே.. எல்லாம் வல்ல கருணை நாயனின் கண்ணியம் பெற்ற ஒரு மகா புருஷரை  இன்னும் சற்று நேரத்தில் நாமெல்லாம் தரிசிக்க போகிறோம் , அவர் பெயர் ஹஜ்ரத் செய்யது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் இனி மக்களுக்கு ஷாகுல் ஹமீத் என்ற நாமத்தினாலேயே அறிய படுவார்கள்  என்று கூறினார்கள். 

No comments:

Post a Comment