Pages

Friday, June 8, 2012

யா காதிர் முராது ஹாசில் !!!....


யா காதிர் முராது ஹாசில் !!!....

மூன்றாம் நாள் பாத்திஹா ஓதவும் ஜியாத் செய்யவும் சுற்றுப்புற மக்கள் நிறைய பேர் கூடியிருந்தனர். ஏழைகளும், எளியவர்களும் தனவான்களும் ஏற்றத்தாழ்வின்றி கூடியிருந்தனர். அந்த கருக்கள் சூழும் வேளையில் ஹஜ்ரத் செய்யிது முஹம்மது யூசுப் சாஹிப் நாயகம் அவர்கள் புனித கபரருகே யாசினை ஓதி தனது தகப்பனாரின் கால்மாட்டருகே வந்தார்கள். ஆதரவற்ற பைங்கிளிபோல் நின்ற ஹஜ்ரத் செய்யிது முஹம்மது யூசபு நாயகத்தை கண்டதும் அந்த நேரத்தில் கூட கூட்டத்தில் சில இதயங்கள் விம்மின. எங்கே அவரும் அழுது விடுவாரோ என திருகூட்டத்தில் சிலர் அண்ணலாரை தழுவி அனைத்து கொண்டார்கள்.

தன் தந்தையின் பாதம் பணித்து கண்ணீர் சரமாக கரகரத்த குரலில் , அல்லாஹும்ம சல்லி அல செய்தினா முஹம்மதின் வ அல ஆலி செய்தின முஹம்மதின்... அஸ்ஸலாமு அழைக்கும் யா செய்யதீ, யா ஜத்தி என்றார்கள் , சில நொடிகள் மெளனமாய் நகர்ந்தன, என்ன ஆச்சர்யம் !!! வ அலைக்கும் சலாம் !! என்று மண்மேட்டில் இருந்து அருட்குரல் வந்ததும் யா இலாஹி, யா அல்லா !! யா ஹஜ்ரத் சாகுல் ஹமீத் !!என்று கூட்டத்தினர் குரல் கொடுத்தனர்.  

நாகூர் நாயகம் / நாகூர் எஜமான் செய்கு அபுதுல் காதிர்  சாகுல் ஹமீத் ஆன்ம உருவமாய் அங்கே இருக்கிறார்கள். என்ற உண்மை ஆனந்தமாய் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவர் மனதிலும் புலர்ந்தது. ஆனந்த ஆரவாரம் எங்கும் வியாபித்தது, கடலிலும், கானகத்திலும், கரையிலும், காற்றிலும் , நாடெங்கிலும் , உலகெங்கிலும் இந்த அற்புத செய்தி - ஆனந்த செய்தி பரவியது. 

யா காதிர் முராது ஹாசில் !!! யா காதிர் முராது ஹாசில் !!! யா காதிர் முராது ஹாசில் !!! என்று முறையிட சொல்லி மக்கள் தங்கள் நாட்டங்கள் நிறைவேற கண்டனர்.

யா காதிர் முராது ஹாசில் !!!....

தொடரும்...

No comments:

Post a Comment