Pages

Friday, June 8, 2012

ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப்


ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் 

லாகூரில் முப்தி நூருத்தினிடம் அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை வர்ணித்த குணங்களுடன் மிக சிறப்பாக வளர்ந்து வந்தார்கள். அன்று அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களுக்கு ஏழு வயது நிரம்பியிருந்தது.

பள்ளியில் அசர் தொழுகையை முடித்துவிட்டு வெளிவந்த அவர்களது காதில் ஒரு சத்தம் கேட்டது. " யூசுப் உமது தந்தை மக்காவில் உம்மை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார் " , சுற்றும் முற்றம் பார்த்த அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள். ஒருவரையும் காணோம். ஆயினும் தாம் கேட்ட அந்த குரல் மகா அர்த்தமுடையது என்று உறுதியான உணர்வுடன் வீடு திரும்பினார். தாயாரை அணுகினார். தம் தந்தை மக்காவில் இருப்பதாகவும் தாம் அங்கு செல்லவேண்டும் எனவும் கூறினார். அச்சமயம் நூருத்தின் முப்தியும் வந்துவிட உன் பெற்றோர்கள் நாங்கள் இங்கு இருக்க நீர் அங்கு போக வேண்டாம் மகனே என தழுதழுக்கும் குரலில் கூறினார். 

அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களது மனதுள் அதுவரை இல்லாத உண்மை ஒளி உதயமாயிற்று,  கடந்த கால வரலாறு தன மனதுள் ஒளி வெள்ளமாய் ஓடின.. தாயே என்னிடம் உண்மை உரைக்க மறக்க வேண்டாம், என் தந்தையை நான் இதோ சத்திய வானத்தில் பார்க்கிறேன்.

அவர் என்னிடம் ஒப்படைக்க சொன்ன மிஸ்வாக்கை ( பல் குச்சி ) தாருங்கள் என்று கேட்டது அதிர்ந்த நூருத்தின் முப்தி அவர்கள் அன்னாரின் அமானதத்தை அவரிடம் ஒப்படைத்தார். மகனே யூசுப் என தாயும் தந்தையும் அரற்றி புலம்பினாலும் அவர்களது பாதம் வணங்கி திரும்பி பாராது தனது கருணை ஒளியை தொடர்ந்து மக்காவை நோக்கி விரைந்தார்கள்.  

சில நாட்களில் சன்அன் ( சூடான் ) பகுதிக்கு வந்து ஒரு சோலையில் களைப்பாரினார்கள்.பின்னர் மக்கா நோக்கி விரைந்தார்கள்.

No comments:

Post a Comment