Pages

Friday, June 8, 2012

மாண்டவர் மீண்டார்


மாண்டவர் மீண்டார்

அன்று வெள்ளிகிழமை ஜுமா தொழுகை முடிந்ததும் தனது சீடர்களுடம் சன்மார்க்க சொற்பொழிவு ஆற்றி கொண்டிருந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை முன்பு ஒரு பெண் வந்தார். அழுகி உறைந்த முகத்துடன் வந்த அந்த பெண்மணி, நாயகமே !! எனது கணவர் கடல் வணிகம் செய்ய பதினோரு ஆண்டு முண்டு கடல் சென்றால். என்ன ஆனார் என்றே தெரியவில்லை. உடன் சென்றோர் எல்லாம் திரும்பி வந்துவிட்டனர். என் துயர் துடைக்க என் கணவரை எனக்கு பெற்று தாருங்கள் என கெஞ்சி கதறினார். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தம் இரு கைகளையும் மேலுயர்த்தி துஆ கேட்டார்கள். அப்பள்ளியின் உள் தம் கணவர் வருவதை கண்டு அந்த பெண்மணி பூரிப்படைந்தாள். எப்படி இங்கு வந்தீர்கள் என தன கணவநிடல் கேட்டாள். நான் பத்தாங்குகளுக்கு முன் கடலில் மூழ்கிவிட்டேன். பின் சொல்ல முடியாத ஒரு இடத்தில் இருந்தேன். சற்று முன் என்னை இவர்களிடம் ( ஹஜ்ரத் நாகூர் நாயகம் ) ஒப்படைத்தார்கள். அன்னாரின் கை பிடித்து இந்த பள்ளியின் வழியாக வந்தேன் என்று சொன்னார். மெல்ல சிரித்த நாயகம் அவர்கள் நீ புத்துயிர் பெற்று உன் மனைவியுடன் வாழ்வாத எல்லாம் வல்ல அல்லாவின் நாட்டம். சென்று வருக, என துஆ செய்து அனுப்பி வைத்தார்கள்.

No comments:

Post a Comment