மரணித்த மனிதன் மீண்டு
வந்தான்
மேற்கு ஆசியாவை ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
நெருங்கும் போது குறசான் என்ற நகரத்தின் மலை அடிவாரம் வழியாக
சென்றார்கள் , அப்போது நடுங்கிய
நிலையில் ஒரு மனிதன் தென்பட்டான். ஹஜ்றது நாகூர்
நாயகம் அவர்கள்
அன்போடு அழைத்து
இந்த நிலைமைக்கு காரணம் என்ன என வினவினார்கள்
தான் ஒரு லாகூர் வாசி என்றும் இருபது
ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் இங்கு வந்த போது கொள்ளையர்காளால் தாக்கபட்டதுமின்றி பொருட்களை இழந்து தனது நண்பர்கள் கொல்லப்பட்டதையும் தனது உயிரை காத்து
கொள்ள இந்த குகையில் ஒளிந்து
இருப்பதாகவும். மேலும்
இறந்து போன நண்பர்களுக்கு நகரத்தில் மனைவி மக்கள்
இருப்பதாகவும் , தனது மனைவி மக்கள் இருப்பதாகவுன் அவர்களின் நிலைமை
அறிந்து தான் வருந்துவதாகவும் மிகவும்
வருத்தமாக கூறினான்.
மனம் வெதும்பினார்கள் நாகூர் ஆண்டகை அவர்கள்.
அந்நேரத்தில் ஹிளுறு ( அலை ) தோன்றினார்கள். இறந்து போன தனது நண்பர்களையும் பொருட்களையும் திரும்ப
பெறுவதே அந்த மனிதனுக்கு மகிழ்ச்சி எனவும் அத்தகைய
ஆற்றலை தங்களுக்கு குத்ரதே இலாஹி அளித்திருக்கிறானே.. அதன்படி
அவனின் நண்பர்கள் இறந்த இடத்திற்கு அழைத்து சென்று
அவர்களை பெயர் சொல்லி அழையுங்கள் என்று கூறி மறைந்தார்கள். அதன்படி
ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை செய்ய இருபது ஆண்டுகளுக்கு முன் மரணித்த
நண்பர்களும் ஒட்டகங்களும் வணிக பொருட்களும் மண்ணிலிருந்து மேல வந்தன..
இவ்விதம் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
சென்ற இடமெல்லாம் அற்புத செயல்களும் மகிமை உதவிகளும் நடந்த வண்ணமே
இருந்தது. அவற்றை
எல்லாம் விவரிப்பது என்பது சாத்தியமே இல்லை. அவற்றில்
ஒரு சில கிரமாத்துகளை எத்தி வைக்க ஆசைபடுகிறேன்.
No comments:
Post a Comment