ஒசியத்
அன்பரே முதலில் பிறக்க போகிற குழைந்தைக்கு எனது தமையனார் பெயரான
செய்யது முஹம்மது
யூசுப் என பெயரிட வேண்டும்
என்றும் , மேலும் எனது மைந்தர் செய்யது முஹம்மது யூசுப்பிறக்கிற போது அல்லாஹ்வின் ரஹ்மாத்தான மெல்லிய மழை தூவி அவரை வரவேற்கும். மேலும்
என் மகன் அதிகம் அழ மாட்டார், ஐந்து வயது முடிவதற்குள் குரான் முழுவைதயும் மனபாடம் செய்திருப்பார், அவரது ஏழாம் வயதில் என் தந்தை எங்கே , அவரது அடையாளத்தை தாருங்கள் என கேட்பார்.
அப்போது தாங்கள்
இந்த மிஸ்வாக்
( பல் துலக்கும் குச்சி ) குச்சியை
அவரிட கொடுங்கள், அச்சமயம் நான் அல்லாஹ்வின் நாட்டாபடி மக்காவில் இருப்பேன். நடை முறைக்கு
மாற்றமாய் என் மைந்தரை வெளியாக்கி தந்த எனது நாயன் அவ்விதமே
அவர என்னிடம்
சேர்ப்பான். என கூறினார்கள். மேலும்
இந்த கோடியில்
இருந்து நாற்பது
நாட்கள் வரை இந்த இருப்பிடத்திலேயே என்னுடன் நீங்கள் தங்கி இருக்க வேண்டும், வெளியிடம் , உமது இல்லம்
சென்று வர அனுமதியில்லை என்றார்கள். அதன் பின் நாற்பது நாள் கழித்து ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
உத்தரவு பெற்று
தமது இல்லையம்
சென்ற நுருத்தின் அவர்கள் தனது மனைவி சூல் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளை கண்டு புரித்து
போனார்கள். பின்பு ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் லாகூரை
விட்டு தனது சீடர்களுடன் மேற்கு
ஆசியாவை / மக்காவை நோக்கி பயணம் செய்தார்கள். ஹிஜ்ரி 959 ம் ஆண்டு ரஜப் மாதம் 12 ம் நாள் ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகையின் அருளால் ஜெஹரா அம்மையாருக்கு பால நாயகம் ஹஜ்ரத்
செய்யது முஹம்மது
யூசுப் சாஹிப்
காதிரி பிறந்தார்கள்.
No comments:
Post a Comment