பாலக பருவத்தில் நோன்பு
அன்னை செயிதத்து பாத்திமாவின் வீட்டிற்கு உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஜனங்கள் எப்போதும் வந்த வண்ணமே இருந்தனர், வருமைஅடைந்தோர்,பிணிக்கப்பட்டோர்,மனநோய் கொண்டோர், மனசாந்தி அற்றோர் இப்படி படலதரப்பட்ட மக்களும் பால நாயகத்தை காண வருவார்கள்.யா அல்லாஹ் உனது பேரருள் பெற்ற இந்த அருட்குழந்தையின் பொருட்டால் என் குறைகளை நீக்கி வைப்பாயாக என பிரார்த்திப்பார்கள்,
விரைவில் கோரிக்கை நிறைவேறி மறுமுறை தேடிவருவது அன்றாட சகஜ நடவடிக்கையாக இருந்தது.. நாட்கள் முன்னோக்கி விரைந்தன , அழகிய பசுந்தளிர்மேல் மின்னுகின்ற பனித்துளிபோல் நமது எஜமானர் செய்யது அப்துல் காதிர்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாக
வளர்ந்து வந்தார்கள். நமது எஜமானர்
பதினைந்து மாத பாலகராக இருந்த
போது ரமலான்
பிறை வந்தது,
வானத்தை கருமேகம் மறைத்திருந்ததால் பிறை தெரியவில்லை, எனவே நகர மக்கள்
அன்று நோன்பு
வைக்க முடியாத
நிலையில் வருத்தத்துடன் ஏற்று கொண்டு
படுக்கைக்கு சென்றனர், பின்னிரவு சஹர் நேரம் பாலநாயகம் செய்யது அப்துல்
காதிர் விழித்து
கொண்டு சினுங்கியத்தின் சத்தம் கேட்டு அன்னையார் குழந்தை வாயில்
அமுத சுரபியை
வைத்தார். ( அந்நேரத்தில் பாலமுது உண்பது பாலகரின்
வழக்கம் ), சிசு சட்டென்று முகம் திருப்பி
கொண்டது, அன்னை பல தரம் முயன்றும் வெற்றி
கிட்ட வில்லை,
அன்னையாருக்கு சட்டென்ற யோசனை, சென்ற ரமலான் மாதாத்தில் முதல் பிறை முதல் இப்படிதானே பாலநாயகம் பால் அருந்த மறுத்தார் ? ஒ இன்று முதல் நோன்புதான் சந்தேகமேயில்லை இதை உடனே நகர மக்களுக்கு அறிவிக்க
வேண்டும் என தந்தையாரிடம் கூறி பிரகடனபடுத்தினார், கணக்கற்ற அற்புத காட்சிகளை கண்கூடாக பார்த்துவரும் மாணிக்கபூர் மக்கள்
இன்று தான் முதல் பிறை என அனைவரும் நோன்பு நோற்றனர்.
No comments:
Post a Comment