Pages

Friday, June 8, 2012

கிராமத்து ஏன் ?


கிராமத்து ஏன் ?

மாசற்ற மாணிக்கமான அருமை நாதாக்கள் ஒரு எறும்பு துன்புற்றாலும் சகிக்க மாட்டார்கள். அவலங்களையும் புலம்பல்களையும் பொறுக்க மாட்டார்கள். மேலும் வலியுல்லாஹ் அந்தஸ்து பெற்ற எந்த ஒரு நாதவும் தங்களை வெளிபடுத்தி கொள்ள விரும்புவதே இல்லை. மக்களிடமிருந்து தங்களை மறைத்து வைக்கும் படி அல்லாஹ்விடம் இறைஞ்சி கொண்டே இருப்பார்கள். ஆயினும் அவசியத்தை பொறுத்து சில பெரியார்கள் வெளிபடுத்த படுகிறார்கள். அப்படி வெளி வந்தவர்களின் மிக முக்கிய நோக்கம் பொது சேவையாக மட்டும்தான் இருக்கும். மனிதனின் புற அக வாழ்க்கையை செம்மை படுத்துவதுதான்.

மனிதர்கள் பிசகு வழி செல்வதை ஒரு  போதும் விரும்பாத வல்ல நாயன் அம் மனிதனுக்கு புரிய வைக்கும் வகையில் வலியுல்லாஹ் மூலம் பற்பல கிரமாத்துகளை வெளி படுத்துகிறான். உண்மையை உணர்த்துகிறான். வருந்தி திருந்த வேண்டியவர்களை வருந்தி திருந்த வைக்கிறான்.பயந்து உணர வேண்டியவர்களை பயந்து உணர வைக்கிறான். அதிசயித்தே அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டுமென்றால் அதிசியம் உண்டாகி திருந்த வைக்கிறான்.
மனிதர்கள் திருந்த வேண்டிய கட்டாயம் வரும் போது தான் முஹ்ஜிசாத், கராமத்து போன்ற அற்புதங்கள் நிகழ்த்துகிற ஆற்றல் வெளிபடுகிறது. மற்றபடி நபிமார்களோ, வலிமார்களே அற்புதம் நிகழ்த்த ஒரு போதும் விரும்புவதில்லை..

மேலும் எல்லா மனிதனும் மார்க்க அறிவு பெற்ற அறிவு ஜீவியாக இருப்பதில்லை.. கராமத்க்க்கள் மூலம் அவர்கள் மனதில் ஒரு சில விசயங்களை ஆழ பதிய வைக்க முடியும் அந்த எண்ணத்தில் தான் இந்த புத்தகத்தில் ஒரு சில கிராமத்துகளை கூறியுள்ளேன், எண்ணிலடங்கா அற்புதங்கள் அடக்கிட இந்த புத்தகத்தில் இடங்கள் போதாது. நாகூர் நாயகத்தின் கிராமத்துக்கள் கன்சுல் கிராமத்து, ஞான பேரொளி நாகூர் வள்ளல் மற்றும் காருண்யா ஜோதி நாகூர் பாதுஷா நாயகம் என்ற புத்தகத்திலும் வெளிவந்துள்ளது. 

No comments:

Post a Comment