இல்யாஸ் நபியின் தரிசனம்
நாக்கு உலர்ந்து விடும் வெயிலில்
கால்கள் கொப்பளிக்க ஹஜ்ரத் நாயகம்
அவர்கள் குவாலியரை நோக்கி செல்லும்
போது பெரியவர்
ஒருவர் முன்னாள்
வந்தார், ஹஜ்ரத் நாயகம் அவர்கள்
சலாம் சொன்னார்கள், அப்பெரியவரும் பதில் சொல்லி நாயகத்துடன் செல்லுமிடம் விசாரித்தார்கள், ஹஜ்ரத் நாயகம்
குவாலியர் செல்லும்
விஷயத்தை சொன்னதும் அகம் மகிழ்ந்து இரு கை மேல் நோக்கி
வானத்தை பார்த்து
துஅ இறைஞ்சினார்கள். ஒரு தட்டில் உணவும்
தண்ணீரும் வந்தது.
அருமை செயிது
அபுதுல் காதிரி
உம்மீது பேரன்பு
கொண்ட அல்லா இவற்றை உமக்கு
தந்துள்ளான், சாப்பிடும் என்றார்கள். ஹஜ்ரத்
நாயகம் சாப்பிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தியதும் , அருமை காதிரே
எந்த அறிவையும் தெளிவாக கற்று கொள்வீராக, எந்த செயலையும் பொறுமையுடன் செய்வீராக, பெரியோர் முன் செல்ல நேரிட்டால் அவர்கள்
அன்பை பெரும்
அளவில் நடப்பீராக என்று உபதேசித்த பின் வேறு சில உண்மைகளை
உணர்த்தியதுடன் இஸ்முல்
அஹ்லத்தையும் கற்று கொடுத்தார்கள். மாறும்
மகிழ்ச்சியுற்ற ஹஜ்ரத்
நாயகம் அவர்கள்
, தாங்கள் யார் ? என்று வினவ எனது பெயர் இல்யாஸ்
நபி ( அலை ) என கூறி மறைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு பின்னர்
உள்ளத்தை வசபடுத்தும் ஆற்றலை முழுவதும் கைவர பெற்றார்கள். நப்ஸ் அம்மார
- பாமர இச்சை அறவே அகன்றது.
No comments:
Post a Comment