ஆண்டவனின் ரகசியம்
மறு நாள் ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை சொன்னபடி
மக்ரிபுக்கும் இஷாக்கும் இடைப்பட்ட நேரத்தில் நூருத்தின் முப்தி
அவர்களை முயினுத்தின் அழைத்து வந்தார்கள். மற்றவர்களை அப்பால்
போக சொல்லிய ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்.
முப்தியை பார்த்து
கூறினார்கள். நுருத்தின் அவர்களே.. அல்லா உங்களுக்கு ஒரு சந்தான பேற்றை
அருள நாடியுள்ளன். இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை உமக்கு
வெள்ளையாக கூற இயலாது. நான் சொல்வதை மட்டும்
கேட்டு கொள்ளும்.
உணமக்கு முதலில்
ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது எனக்கே
சொந்தமானது அதை என்னிடம் தந்து விட வேண்டும், பிறகு நாக்கு
ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழைந்தைகளும் பிறக்கும் அதற்கு நீங்களே
நிஜமானே பெற்றோர்.
என கூறினார்கள். நுருத்தீன் முப்தியின் சிந்தனையில் பல மின்னல் கீற்றுகள் வீசின. முயினுத்தீன் சொன்ன உருவக கதையின் அர்த்தம்
புரிந்தது. சிறிதும்
தாமதிக்காமல் சம்மதம்
சொன்னார்கள்.
இப்போதே இல்லம் செல்லும். உமது துணைவியாருக்கு விஷயத்தை
விளக்கி சம்மதத்தை தெரிந்து கொள்ளும்.
சம்மதம் தந்தால்
நாளை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மற்றொரு
மாதின் துணையோடு
உன்மது துணைவியை
இங்கே அழைத்து
வாரும், வரும் போது மறக்காமல் தாம்பூலம் ( வெற்றிலை
) எடுத்து வாரும்
என கூறினார்கள். ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை கருத்துக்கு விருப்பம் தெரிவித்த முப்தியாரின் மனைவி ஜெஹரா அம்மையார் மறுநாள் இரவு துணைக்கு தம் தோழியை அழைத்து
கொண்டு கணவருடன்
ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகையின் இருப்பிடம் சென்றார்கள். எதிரே இருந்த ஒரு அறைக்குள் ஜெஹரா அம்மையாரை தமது தோழியுடன் இருக்குமாறு கூறினார்கள்.
அடுத்து செய்ய வேண்டியதை பற்றி ஏற்கனவே உத்தரவு
பெற்றிருந்த பிரதாறன
சீடர்களான ஹசனும்
முயினுத்தீனும் ஒரு நீதான் துணி சுருனையை கொண்டு
வந்து ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் இருந்த
இடத்திற்கும் ஜெஹரா அம்மையார் இருந்த
இடத்திற்கும் இடையே ஒரு தடுப்பு
திரை கட்டினார்கள்.
ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை எழுந்தார்கள். இரண்டு ரக்ஆத்
நபில் தொழுதார்கள். அதன்பின் நூருத்தின் கொண்டு வந்த தாம்புலத்தை வாங்கி
தம் திரு வாயில் போட்டு
மென்றார்கள். பின்னர்
ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகையின் புனித நிலையில் மாறுதல்கள் தோன்ற ஆரம்பித்தன. கண்கள் சிவந்தன, வேர்வை ஆற்றாய் பொங்கிற்று,சட்டென்று தம் திரு கரங்களை தன் பின்னால் தாங்கி
கொண்டார்கள். இப்படி
வெகு நேரம் சென்ற பின் ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
சுயநிலைக்கு திரும்பினார்கள். தம் வாயினின்று தாம்புல
சக்கையை கக்கி நுருத்தினிடம் கொடுத்து, இதை உடனே உமது மனைவியிடம் கொடுத்து ஒரே வாயில் விழுங்க
சொல்லும் என்றார்கள். தம் கணவர் கொண்டு வந்த தாம்புல சக்கையை
பய பக்தியுடன் வாயில் போட்டு
விழுங்கினார் ஜெஹரா அம்மையார். பின்னர் தோழியுடன் ஜெஹரா அம்மையாரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அதன் பிறகு நூருத்தின் முப்தியை அழைத்து ஒசியத் சொன்னார்கள்.
No comments:
Post a Comment