குத்பு பட்டம்
நாட்கள் நகர்ந்தன, மாதங்கள் மாறின , வருடங்கள் ஓடின.. ஒரு நாள் ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் இறைவனின்
சிந்தனையில் லயித்து
இருந்த போது ஹிளுறு ( அலை ) தோன்றினார்கள். சாகுல்
ஹமீத் அவர்களே
!! என்னோடு வாருங்கள்.. சுல்தான் ஸ்கந்தர்
துல்கர்னை கோட்டையை
உமக்கு காட்ட சொல்லி இறைவன்
ஆணை என கூறினார்கள்.
ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களும் ஹிளுறு ( அலை ) அவர்களும் கடல் மேல் நடந்தார்கள். இந்தியாக்கும் இலங்கைக்கும் நடுவே மத்திய
கடலில் மூழ்கினார்கள், அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிருள்ள விளங்கினக்களும் உயிரற்ற கடல் வாழ் பொருட்களும் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்களை வணங்கி
ஒதுங்கிகொள்ள கோட்டை
ஒன்று அவர்களை
வரவேற்றது. பளிங்கு
கற்களும் வழுக்கும் தரைகளும் மணக்கும்
சந்தன நறுமணமும் ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்களை
சிலிர்க்க வைத்தது.
உள்ளே நுழைந்ததும் ஒரு அறையில்
சந்தன கை அச்சுக்களாக இருந்தது.
ஹிளுறு ( அலை ) அவர்கள் கூறினார்கள் இதில்தான் இவ்வுலகில் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட வலிமார்களும்
குதுமார்களின் கை அச்சு உள்ளது.
எல்லோருக்கும் மேல இருப்பது ஹஜ்ரத்
கெளது நாயகத்தின் கை அச்சாகும், இங்கே உமது கை அச்சை பதியும் என கூறினார்கள்.
பூரிப்பில் திளைத்த ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
கை சந்தனத்தில் துளைத்து சட்டென்று மேல உயர்ந்தது. தனது பாட்டனார் ஹஜ்ரத் கெளது நாயகத்தின் கை அச்சினை அடைந்ததும் சட்டென்று நின்றது
, பாட்டனாரின் மேல் உள்ள மரியாதையில் அவர்கள் கை அச்சுக்கு கீழே ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
கை அச்சை பதித்தார்கள்.
அந்த கணம் நகரா இசை முழங்க ஷெனாய்
வாசிக்க சாகுல் ஹமீதே !! இன்றைய தினம் குத்பு பட்டம் உமக்கு நிரப்பும் ஆயிற்று.. என ஹிளுறு ( அலை ) நவின்றார்கள்.
No comments:
Post a Comment