Pages

Friday, June 8, 2012

தானே நிரம்பிய தண்ணீர்


தானே நிரம்பிய தண்ணீர் 

அன்னை  செயிதத்து பாத்திமா சூல்கொண்ட ஆறாவது மாதம், அன்னையின் கனவில் ஹிளுறு (அலை) மீண்டும் தோன்றினார்கள், அன்னைக்கு சலாம் கூறினார்கள். செயிதத்து பாத்திமா அவர்களே..தங்கள் வயிற்றில் இருக்கும் சிசு, இறைவனால் மிகவும் உவக்கபட்ட குத்பு ஆவர், உயிரினங்கள் காத்து ,பூமியில் நல்லாட்சியும், இறை தொண்டு செய்யும் கெளது அவர், அன்னாருக்கு செய்யது அப்துல் காதிர் என பெயர் வைக்கும்படி சொல்லி மறைந்தார்கள்.

இக்கனவை கண்டு எழுந்த அன்னை  செயிதத்து பாத்திமா அவர்கள் அதிகாலை ஜாம வணக்கத்திற்காக ஒலு ( கை,கால் சுத்தம் ) செய்ய கிணற்றடிக்கு சென்றார்கள், கிணற்றில் நீர் எடுக்கும் போது கயிறு அறுந்து பாத்திரம் தளர்ந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது. நேரம் தவறி விட்டால் தொழுகை தவறி விடுமே என வருந்தும் போது " அச்சம் வேணாம் அன்னையே, நீர் நிரந்த பாத்திரம் தங்கள் பக்கத்தில் இருக்கிறது " என்று மென் குரல் கேட்டது, திரும்பிய அன்னை அகம் மகிழ்ந்தார்கள் , ஆச்சர்ய வியப்பு, கிணற்றில் தன கண் முன் விழுந்த பாத்திரம் தனது அருகாமையில் தண்ணீர் நிரம்பி இருப்பதை கண்டு வியந்தார்கள்.

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லி ஒலு செய்து தனது தொழுகையை நிறைவேற்றினார்கள். நாகூர் நாதா  ஹஜ்ரத்  செய்யது அப்துல் காதிர்   நாயகத்தின் இரண்டாம் கராமத்து தனது தாயாருக்கு என்பதை இதன் மூலம் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment