ஹஜ்ரத் முயினுத்தீன் தனது இறந்த தாயாருடன் பேசிய அதிசயம்
தன்னுடன் இருக்கும் ஹஜ்ரத் முயினுத்தீன் அவர்கள் ஒரு முறை ஹஜ்ரத் நாகூர் அப்துல்
காதிர் ஷாகுல்
ஹமீத் ஆண்டகை அவர்களிடம் உத்தரவு
பெற்று தனது குடும்பத்தினரை கண்டு வர புறப்பட்டார்.
திரும்ப வருகையில் கவலை தோய்ந்த
முகத்துடன் வந்தார்.
வினவிய நாயகத்திடம், தனது தாயார்
இறந்துவிட்டதையும் அவர்கள்
திருமுகம் காண முடியா நிலைமையும் விளக்கி அழுத முயினுத்தீடம் , உங்கள் தாயார்
சமாதிக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்கள் ஆண்டகைகள். சாமாதிக்கு சென்றது முயினுத்தீன் தாயார் பெயர் சொல்லி ஆண்டவன்
அருளால் அழைத்ததும் அவரது தாய் வென்னுடை தரித்து
எழுந்து மகனுடன்
பேசினார்கள்.
தனது மகனாகிய முயினுத்தீனின் தீன் மார்க்க சேவையின்
பொருட்டால் , ஹஜ்ரத் நாகூர்
அப்துல் காதிர்
ஷாகுல் ஹமீத் ஆண்டகை துஆ பாரகத்த்தால் எல்லாம்
வல்ல அல்லா தன்னை சொர்க்கத்தில் வைத்து இருப்பதாகவும் கூறினார்கள். தாயும்
மகனாரும் சிறிது
நேரம் பேசி இருந்த பின் அன்னையார் மறைந்தார்கள். மாண்டவரின் தரிசனம்
மகத்துவம் பற்றி பலதரப்பட்ட நூல்களில் ஹஜ்ரத் நாகூர்
அப்துல் காதிர்
ஷாகுல் ஹமீத் ஆண்டகை அவர்களை
பற்றி வந்துள்ளது.
No comments:
Post a Comment