கருணை நாயகம்
உதயம்
அன்னை செயிதத்து பாத்திமாவுக்கு பத்து மாதங்கள் நிரம்பின, காருண்யா ஜோதி இப்பூவுலகில் தோற்றமளிக்க வேண்டிய காலம் நெருங்கியது. சரியாக சொல்லவேண்டுமென்றால் அரபு கணிதப்படி ஹிஜ்ரி 910ம் ஆண்டு , ஜாமதுல் ஆகிர் மாதம் , பிறை பத்து , வியாழன் மாலை வெள்ளி இரவு அன்னையாருக்கு பிரசவ நோவு கண்டது. தஹஜ்ஜத்து நேரம், மது சூரிய உதயத்திற்கு முன் திடீர் என்று சந்தன நறுமணம் கொண்ட தென்றல் காற்று வீச துவங்கியது ,
வானோர்கள் ஆகாய வெளி முழுவதும் தீன் கூறி நிற்கின்றனர், ஹக்கன் அருள் பெற்ற நபிமார் மற்றும் வலிமாரின் புனித ஆத்மாக்கள் ஹஜ்ரத் ஹசன் குத்துஸ் இல்லத்தில் அணியணியாய் நிற்கின்றனர், சந்தன மனம் கமழும் மெல்லிய மழை துளிகள் உதிர்ந்து கொண்டிருந்த வேளையிலே பாதுஷா நாயகம் சுல்தானுல் அவ்லியாஹ், குதுபுல் அக்தாப், கெளசுல் இஸ்லாம், மீரான் சுல்தான், ஹஜ்ரத் செய்யதினா செய்யது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது சாஹிப் , காதிர் வலி கண்ஜேசவாய் கண்ஜெபக்ஷ் மனித கொடிகளை ரட்சிக்கும் பூமான் அவர்கள் பூமியில் பிறந்தார்கள்.
மண் வாழ மக்கள் வாழ அன்பு வாழ அறன் வாழ இவ்வுலகில் அவதரித்த விண்ணவரும் மன்னவருமாகிய நம் எஜமானை நபிமார்களும், ஆன்மீக மன்னர்களும், நம் கண்ணுக்கு தெரியாத தெய்வ சேவகர்களும் ஹஜ்ரத் ஹசன் குத்துஸ்
இல்லத்திற்கு வந்து நம் எஜமானை
தரிசித்துவிட்டு அன்னையாருக்கு சலாம் கூறி சென்றனர். பிள்ளைக்கு பேர் சூட்டும்
தருணத்தை எண்ணி தந்தையார் அமைதியில் ஆழ்ந்தார்.
ஏற்கனவே தன் மனைவியின் கனவில் வந்த இறைத்தூதர் ஹிளுறு நபி (ஸல்) கட்டளைபடி பெயர் வைக்க முடிவு செய்து
இருப்பினும் யார் பெயர் வைப்பது
என்று ஆழ்ந்த
சிந்தனயில் இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் உதய சூரியன் எட்டி பார்க்கும் வேளையில் அன்னை செயிதத்து பாத்திமா முன் இரு பெரியவர்கள் தோன்றினார்கள். அவர்களின் ஒருவர் தன் கனவில் வந்த இறை தூதர் ஹிளுறு நபி ( அலை ) அவர்கள்.
தம் அருகில்
இருப்பவர் திரு இறைத்தூதர் நபி இல்யாஸ் (அலை) அவர்கள் என அறிமுகம் செய்துவிட்டு ஹிளுரு நபி (அலை) அவர்கள்
பாங்கினன கூறி பிள்ளைக்கு செய்யது அப்துல்
காதிர் என்று பெயர் சூட்டினார்கள், பிறகு பாலகனை
இறைத்தூதர் இல்யாஸ்
நபி (அலை) இடம் கொடுத்து
மூன்று முறை செய்யது அப்துல்
காதிர் , செய்யது
அப்துல் காதிர் , செய்யது அப்துல்
காதிர் என்று கூறி பிள்ளையை
தாயாருக்கு அருகில்
கிடத்தி மறைந்தார்கள். இவையெல்லாம் கண்ட அன்னை செயிதத்து பாத்திமா ஆச்சர்யத்தில் உறைந்தார்கள். பின்பு தந்தையும் அதே பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment