Pages

Friday, June 8, 2012

குருநாதரின் வேண்டுகோள்


குருநாதரின் வேண்டுகோள்  

குருநாதரை தேடிவந்த நோக்கம் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகைக்கு முற்றும் நிறைவேறிற்று தனது ஹஜ்ஜு கடைமையை நிறைவேற்ற குருமகானிடம் உத்தரவு கேட்டு நின்றார்கள். சிறிது நேரம் யோசனையில் இருந்த குவாளியார் ஆண்டகைகள் மெல்ல சொன்னார்கள். ஷாகுல் ஹமீதே ! அல்லாஹ்வின் மகிமை நிறைந்த ரகசியத்தை தாங்கியுள்ள ஒரு புனித ஆத்மா காரனபுரியில் உலகுக்கு வர துடித்துக்கொண்டு இருப்பதை நான் அறிகிறேன். அது உமது உயிரிலும் உதிரத்திலும் கலந்து உமது மகனாய் அல்லாஹ்வின் அருளாய் இம்மண்ணுக்கு வர போகிறது அந்த ஜீவனை கொண்டு அழகில் சாந்தியும் சாஹிப்மார் சரித்திரமும் உருவாக போகிறது. எனவே நீர் திருமண செய்து கொள்ள வேண்டுமே !! என கூறினார்.

ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை பணிவுடன் கூறினார்கள். குரு நாதவே , எனது நிலையை தாங்கள் அறிவீர்கள் திருமண விருப்பத்தை நெஞ்சில் இருந்து கழற்றி எறிந்தவன் நான் என்பது தாங்கள் அறியாதது அல்ல. இருப்பினும் உலகுக்கு சொந்தமான பொருளை உலகத்தில் ஒப்படைக்க மறுப்பது தவறு, ஆகவே எல்லாம் வல்ல அல்லா கன்னி மரியத்தின் வயிற்றில் இருந்து எப்படி தந்தை இல்லாமலேயே ஈஸா (அலை) அவர்களை வெளிபடுத்திநானோ அதைப்போல் அவன் நாட்டப்படி என் மகனை எனக்கு வெளிபடுத்தி தருவான் என்றார்கள்.

குவாலியர் நாயகம் மறுமுறை மெளனத்தில் ஆழ்ந்தார்கள். பின்னர் முகம் மலர நல்லது ஷாகுல் ஹமீதே.. எல்லாம் வல்ல அல்லா அந்த வல்லமையை உமக்கு தந்தருவலானாக.. அந்த குழந்தையை வெளிபடுத்துகிற ஸ்தானம் மக உன்னதமாயிருக்கட்டும். என அறிவுரைத்து விட கொடுத்தார்கள்.
இங்கே ஒரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.  அந்த குழந்தையை வெளிபடுத்துகிற ஸ்தானம் மக உன்னதமாயிருக்கட்டும் என்ற வார்த்தைகளில் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளது. அதை பற்றிய விரிவான விளக்கும் பேரொளி நாகூர் வள்ளல் , காருண்யா ஜோதி நாகூர் பாதுசா நாயகம் மற்றும் பல தரப்பட்ட நூலில் விளக்கமாக உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தை தனது அறிவு கண்ணால் விளங்கியவர்கள் , அண்ணலார் எம் பெருமான் நபி ( ஸல் ) சுன்னத்தை எந்த சந்தர்பங்களிலும் தவற விடாதவர்கள்.

No comments:

Post a Comment