அஜ்மீர் க்வாஜா முயீனுத்தின் ( ரலி ) - சந்திப்பு
கானகம் வழியே சென்று கொன்றிருந்த ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்களுக்கு அஜ்மீர் சென்று
க்வாஜா முயீனுத்தின் ( ரலி ) அவர்களை
தரிசிக்க நாட்டம்
உண்டாயிற்று. அதன்படி
சில நாட்களில் அஜ்மீர் நகரை சென்றடைந்தார்கள் ஹிந்தல் வலியின் ரவுலா ஷரீபில்
நின்றபோது உணர்ச்சி
பிழம்பானர்கள். ரவுலா ஷரீபில் நாகூர்
ஆண்டகை நுழைந்ததும் வெளி கதவுகள்
இருக முடிவிட்டன.. சுடருடன் கலந்த சுடர் பிரிய வெகு நேரமாயிற்று. க்வாஜாவிடம் இருந்து
உத்தரவு வாங்கி
தம் கூட்டத்தாருடன் புறப்பட்டு ஒரு மலையடி
வாரத்தில் முகாம் செய்தனர்.
பின்னர் அஜ்மீர் ஷெரிப்பில் ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். அந்த சொற்பொழிவில் காலத்தின் மாற்றத்தையும் பூமியின்
பிரிவாக்கத்தையும் வெகு இலகுவாக கூறி அல்லாஹ்வின் கோப பார்வைக்கு ஆளாவதை தவிர்க்குமாறு வேண்டினார்கள்.
மேலும் அன்றே எல்லாவறையும் அறிந்து நடக்க போகும் விபரீதங்களை எடுத்துரைத்தார்கள்.
இந்த இந்திய தேசத்தில் பாதுஷாக்களும் அரசர்களும் இந்து மத மன்னர்களும் மதத்தின்
பெயரால் மனித ரத்தத்தை சிந்தாதீர்கள் எனவனும், இந்த நாட்டை வெகு
விரைவில் சாம்பல் நிற கண்களையும் முடியையும் ( ஆங்கிலேயர்களால் ) கொண்டோர்
வியாபாரம் என்ற நோக்கில் வந்து அபகரிப்பர் எனவே உங்களை நீங்கள் ஒத்துழைமை யாக்கி
கொள்ளுங்கள் என மாற்று மத சகோதரனையும் அரவணைத்து, எச்சரித்து நாட்டிற்காக சொற்பொழிவு ஆற்றினார்கள்.
இத்தகைய சம்பவங்களை பல நூல்கள் தெளிவாக விளக்கியுள்ளது.
No comments:
Post a Comment