உருவாகும் இறை நேசர்
ஹிஜ்ரி 909 ம் ஆண்டு - ஜாமதுல் அவ்வல்
பிறை பதினான்காம் நாளின் பின்னிரவு.. அன்னை செயிதத்து பாத்திமா அவர்கள் உறங்கும்
போது ஹஜ்ரத்
ஹிளுறு ( அலை ) என்ற அல்லாஹ்வின் தூதுவர் கனவில்
தோன்றினார்கள்..
அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ ) அன்னை செயிதத்து பாத்திமாவே எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு பூரணமாக
உள்ளது , அண்ணல் நபியின்
குலகொடியில் உதித்த
மணிவிளக்கே..தங்கள்
கருவில் நல்லோர்களில் ஒருவர், இறைநேசர்களில்
சிறந்தவர் உருவாகிறார் உமது மைந்தர்
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் தோற்ற பொலிவையும் இறைதுதுவர் ஈஸா (அலை) அவர்களின் இதய கனிவையும் உடையவாராயின் மற்றுமன்றி அருள் புரியகூடிய இறை நேசராக
விளங்குவார் " என்று கூறி மறைந்தார்கள்.
திடுக்கிட்டு விழித்த அன்னை செயிதத்து பாத்திமா அவர்கள்
அடுத்து உறங்கிய
தமது கணவரை எழுப்பி கனவை கூறினார்கள். அருமை தந்தை ஹஜ்ரத்
செய்யது ஹசன் குத்தூஸ் அவர்கள்
மனம் மகிழ்ந்து தன் சிந்தனையனைத்தையும் ஒன்று திரட்டி எல்லாம்
வல்ல அல்லாஹ்விற்கு நன்றி கூறி பின்னர் விரைந்து
சென்று சுல்தான்
பெரோஜ் ஷாதுக்ளக் பள்ளிவாசலில் வைகறை பொழுதின் தொழுகையை
நிறைவேற்றி வீடு திரும்பினார்கள். அன்று அவர்கள் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. மைந்தன்
பிறக்கும் திரு நாளை எதிர் பார்த்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment