குஷ்டரோகியின் குறை தீர்த்தது
மக்காவை நோக்கி நாகூர் ஆண்டகை அவர்களும்
சீடர்களும் சென்று கொண்டு இருந்தபோது வழியில் கண்ஜிப்பூர் என்ற மாகாணத்தில்
தங்கியிருந்த போது ஆண்டகையின் அற்புதம் கேள்விப்பட்ட அம்மகான அதிபர் தனக்கும் தம்
மனைவிக்கும் ஏற்பட்டுள்ள தீரா பிணியை தீர்த்துவைக்கும் படி மன்றாடினான், பார்வைக்கும் நல்ல விதத்தில் இருக்கும்
அவனுக்கு என்ன நோய் என கூட்டத்தில் உள்ளோர் வியக்கும் போது, தன கையுறையை கழற்றினான். அன்னாரின் கைகள் அழிந்து போய் குஷ்டரோகையின் முழு
தாக்கமும் வியாபித்து இருந்தது. இரக்கம்கொண்ட கருணை நாயகம் தனது கையால் மெல்ல தடவி
ஆண்டவனிடம் துஆ செய்தார்கள். தன் கை பட்ட இடமெல்லாம் நொடி பொழிதில் குணமாவதை கண்ட
அதிபர் கண்ணீர் விட்டு அழுதார். துஆ செய்த ஆண்டகை அன்னாருக்கு புத்திர பாக்கியத்திற்க்கும் துஆ செய்து
அனுப்பி வைத்தார்கள்.
No comments:
Post a Comment