முதல் கிராமத்து
அன்னை செயிதத்து பாத்திமா கருத்தரித்து மூன்று மாதங்களுக்கு பின்னர் ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் ( ரலி ) கடும் நோய் வயப்பட்டார்கள் , மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் செய்தும் குணமடையாததால் அன்னை செயிதத்து பாத்திமா.மிகவும் வேதனைப்பட்டு கண்கலங்கினார். ஒவ்வொரு தொழுகை வேளையிலும் இறைவனிடம் கண்ணீர் விட்டு முறையிட்டார்.
ஒரு நாள் இதே எண்ணத்துடன் படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது.. " அம்மா " என்று ஒரு சத்தம்.. கண் விழித்து அன்னை செயிதத்து பாத்திமா.உற்று நோக்கினார்.. ஒருவரையும் காணோம்.. மீண்டும்
அதே குரல் " அம்மா "
உற்று நோக்கினார் . என்ன விந்தை.. தனது வய்யிர்ருற்குள் இருந்து
அல்லவா வருகிறது
இந்த மென்குரல்.. மீண்டும் தொடர்ந்தது அந்த மென்குரல்.. " தாயே அஞ்சாதீர்கள்..இறையருளால் என் தந்தை இன்றே சுகமடைவார் " சத்தம் நின்றதும் வியப்பும் ஆனந்தமாய் அன்னை செயிதத்து பாத்திமா தனது கணவரை நாடி விரைந்தார். மறுநாள் பொழுது
சாய்வதற்குள் ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் ( ரலி) நோய் நீங்கி சுகமடைந்தார்.
கருணை காரண கடலாகிய நாகூர்
நாதா ஹஜ்ரத்
செய்யது அப்துல்
காதிர் நாயகத்தின் முதற் கராமத்து
இதுதான். தன வாழ் நாள் முழுவதும் - ஏன் உலக முடிவு
காலம் வரை மக்கள் அனைவரின்
பிணி அகற்றி
வரும் நாகூர்
நாதா ஹஜ்ரத் செய்யது அப்துல் காதிர் நாயகத்தின் முதற் தொண்டு தனது தந்தையிலிருந்தே ஆரம்பிக்கிறது.
No comments:
Post a Comment