Pages

Friday, June 8, 2012

சீடர்கள் தந்த குருநாதர்


சீடர்கள் தந்த குருநாதர்  

பத்து வருட கால குவாலியர் ஆண்டகையின் நேரடி பார்வையில் இருந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அங்கிருந்து புறப்பட தயாரானதும் ஹஜ்ரத் குவாலியர் ஆண்டகையும் அவரது குடும்பத்தினரும் சீடர்களும் கண் கலங்கினார்கள்.

பின்னர்  ஹஜ்ரத் குவாலியர் ஆண்டகை அவர்கள் , ஷாகுல் ஹமீதே தங்களுடன் 404 பக்கிர் மார்களை உங்களுடன் அனுப்புகிறேன். இவர்கள் குவாளியருக்கும் மாநிக்கபுருக்கும் இடையில் உள்ள காட்டில் திருட்டு வாழ்க்கை புரிந்தவர்கள். இவர்கள் திருந்த அல்லாஹ்விடம் நான் பல நாள் பிரார்த்தித்து இருக்கிறேன். நீங்கள் இவர்களை சீடர்களாக ஏற்று கொள்ள வேண்டும். மேலும் இவர்களுடன் எனது பிராதன சீடர்களையும் தங்களுடன் அனுப்புகிறேன். அவர்கள் மார்க்க தொண்டு புரிய தங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.

குருவின் கட்டளைக்கு அடிபணிந்து ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் இதனை ஏற்றார்கள். பிரதான சீடர்களில் முயினுதீனும் இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்தார்கள். ஹஜ்ரத் முயினுதீனுக்கோ அதை விட மிக பூரிப்பு.

No comments:

Post a Comment