Pages

Friday, June 8, 2012

அச்சப்ப நாயக்கனுக்கு அருள் வழங்கல்



அச்சப்ப நாயக்கனுக்கு அருள் வழங்கல்

தஞ்சாவுரை தலைநகராய் கொண்ட சோழ மண்டலத்தில் பெரும் பகுதியை நாயக்கமார்கள் ஆண்டு வந்த காலம் அது. அச்சப்ப நாயக்கன் தலைமை பீடத்தில் ஆட்சி புரிந்து வந்தான். எதிரியால் பில்லி சூனியத்தால் கைகால்கள் முடக்கப்பட்டு படுக்கையில் கிடந்தான். எத்தகையோ வைத்தியர்கள் சோதித்தபோதும் கொடிய நோயை வெற்றி கொள்ள முடியவில்லை.

மன்னனுக்கு சிகிச்சை அளித்தவர்களில் பொதிகை மலை முனிவர்களும் அடங்குவர். அன்னார்கள் மூலம் கருணை நாயகம் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையின் மகிமையை கேட்டறிந்த மன்னன் ஹஜ்ரத் நாகூர் நாயகம் அவ்வழியாக வருவதை அறிந்து வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்தான். தஞ்சையில் முகாமிட்ட ஹஜ்ரத் நாகூர் நாயகத்தை பிரதான அமைச்சர் அணுகி மன்னரின் பரிதாப நிலையை விலகினான். மனமிரங்கிய ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை மன்னரை இங்கு கொண்டு வாருங்கள் என கூறினார்.

சுருட்டப்பட்ட அழுக்கு துணி மூட்டை மாதிரி தன் முன்னாள் கிடத்தப்பட்ட மன்னனை கண்டது ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் பெரிதும் இறக்காமாகி கைகூப்பி கண்ணீர் விட்டபடி இருந்த மன்னனை தேற்றினார்கள். அரச மாளிகையில் குறிப்பிட்ட இடத்தில் மாடத்தில் புற ஒன்று முடக்க பட்ட நிலையில் இருக்கிறது, அதை கொண்டு வாருங்கள் என கூறினார்கள். கொண்டு வரப்பட்ட புறா முழுவதும் ஊசிகளால் குத்தப்பட்டு இருந்தது.

அவற்றை ஒவ்வொன்றாய் ஹஜ்ரத் நாகூர் நாயகம் அவர்கள் உருவ அரசன் அக்கணமே நோய் தீர்ந்து சுகம் பெற்றான். இனி தனக்கு விமோசனமே கிடையாது என எண்ணியிருந்த வேந்தன் ஆண்டகையின் காலை பிடித்து கொண்டு ஆனந்த கண்ணீர் சொரிந்தான். திரவியங்களை மூட்டை கட்டி கொண்டு வந்து ஆண்டகையின் காலில் கொட்டினான். மறுத்து விட்டார்கள் ஆண்டகைகள். வேந்தனே நாம் உமது அதிகாரத்திற்குட்பட்ட நிலத்தில் நாம் தங்க நேரிட்டால் வேண்டும்போது தேவைப்பட்ட பூமி கொடுத்தால் போதும். உமக்கு வேண்டியதை எம்மிடம் கேளும் என கூறினார்கள். மன்னரின் மனைவி தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள வேண்டினால் , துஆ செய்து விட்டு தாம் நிலைகொள்ள அல்லாஹ்வால் அறிவுறுத்தப்பட்டிருந்த பூமியை நோக்கி நடக்க தொடங்கினார்கள்.திருவாரு வழியாக மேலை நாகுறை அடைந்து பின்பு நாகப்பட்டினத்தை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment