குருவை தேடி புறப்படுதல்
ஹஜ்ரத் நாயகம் அவர்கள் பள்ளி படிப்புகளை மிக வேகமாக முடித்து
விட்டார்கள், குர்ஆன், தப்சீர், ஹதீஸ், பிக்ஹு மற்றும்
பலதரப்பட்ட மார்க்க
கல்விகளையும் சரித்திரம், பூகோள, கணிதம், தத்துவம், தர்க்கம், வான சாஸ்திரம் ஆகிய லெளகீகக்
கல்விகளையும் பதினெட்டு வயது நிரம்புவதற்குள் கற்று முடித்தார்கள் அறியா புறத்திலிருந்து அகமிய அறிவையும், ஆத்மீக அமைதியையும் நீதி கோட்பாடுகளையும் செம்மையாக அறிந்தார்கள். சிறு வயது முதலே குறைந்து பேசி கொள்கையை கடைப்பிடித்து சுருங்க சொல்லி
விளங்க வைக்கும்
ஆற்றல் ஹஜ்ரத்
நாயகத்திற்கு வெகுவாக
இருந்தது. பெருபான்மையான நேரத்தில் மொளனமாய்
இருப்பார்கள், இரவு முழுவதும் திருக்குர்ஆன் ஓதுவார்கள், நபில் தொழுகுவார்கள், நோன்பு நோற்பார்கள். நாளாக நாளாக இறைவனை
உள்ளடி அறியும்
அவா அதிகரித்து தனசுலாத் தீன் தத்துவத்தையும் உருஜ் ஜின் அகமியத்தை உணர்ந்து கொள்ள தேட்டம் அதிகரித்து இருந்தது.
ஒரு நாள் தன பெற்றோர் முன் வந்து அமைதியாக நின்றார்கள். ஹஜ்ரத் நாயகத்தின் முகத்தை பார்த்த
பெற்றோர்கள் மகனே என்ன வேண்டும்
என அன்புடன்
வினவினார் அருமை தந்தை . அருமை தந்தையாரே உலகம் மறுமையின் விளைகளமாகும்,என்ற ஹதீசையும் இம்மையிலே இறைவனை
அறியாதவன் மறுமையிலும் அறிய முடியாது
என்ற குர்ஆன்
வசனத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனவே சர்வத்தையும் படைத்த
வல்லநாயனை எனக்கு
தெளிவாய் புரிய வைக்க கூடிய ஆசிரியரை ( குருவை)
தேடி புறப்பட
விரும்புகிறேன் எனக்கு
நல ஆசி புரியுங்கள் என்று கூறினார்கள்.
ஹஜ்ரத் நாயகத்தின் உருக்கமான உண்மையான
ஆத்மீகத்தை உணர்ந்த
அருமை தன்னதை
கண்களில் கண்ணீர்
கரைந்தோடியது, ஆரத்தழுவி மகனே எல்லாம்
வல்லம் அல்லா உமது நாட்டத்தை நிறைவேர்ருவானாக, இன்றே நீர் உமது மார்க்க பயணத்தை
தொண்டங்குவீராகா, எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் எல்லா அறிவையும் புகட்டப்பட்ட உணமக்கு
என்ன அறிவுரை
பகிர்வது ? நாயனின் வலியான
அன்பு மைந்தரே
..ஒரு சற்குரு
நீர் தேடிகொள்வதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சியே..அத்தகையே
பெரியாரை தேடி நீர் வேறு எங்கும் போக வேண்டாம். கிழக்கே
இரு நூறு மெயில் தூரத்தில் மைந்துள்ள குவாலியர் பட்டனத்திக்கு செல்லும், ஆத்மீக அறிவு ஜீவிகளும், மார்க்க மகான்களும் நிறைந்த
நகரம் அது. எல்லாம் வல்ல அல்லா அங்கு உமக்கு ஒரு சிறப்பான செய்குவை
தந்தருட்டும் என துஅ செய்தார்கள்.
ஹிஜ்ரி 928 ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதர் திங்கள்
கிழமை வழிதுனையின்றி கை செலவுக்கு பொருள் இன்றி, துறவு கோலத்துடன் வழியனுப்ப வந்த உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் சலாம் கூறி ஜான குருவை தேடி ஹஜ்ரத் நாயகம்
புறப்பட்ட போது கலங்காத கண்கள்
இல்லை, இறைவனை வேண்டாத நாவுகள்
இல்லை..
No comments:
Post a Comment