Pages

Friday, June 8, 2012

குவாலியர் பள்ளியில் முகாம்



குவாலியர் பள்ளியில் முகாம் 

இப்படி எத்தனையோ ஆச்சர்ய அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்கு நல்லுதவி புரிந்தவாறு ஹஜ்ரத் நாயகம் அவர்களும் முயினுத்தீன் அவர்களும் குவாலியரை வந்து அடைந்தார்கள். நகரத்து எல்லையில் அமைதியான சூழலில் உள்ள ஒரு பள்ளி வாயில் அவர்களை வெகுவாக வசீகரித்தது. அதையே தமது தங்குமிடமாக தீர்மானித்து , முயினுத்தீன் அவர்களே எனது பெற்றோர் கூறிய படி நான் குவாலியர் வந்துவிட்டேன் , இனி எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கு என் குருவை காண்பிப்பானாக.. ஆமீன்.. சில வினாடிகள் அமைதிகாத்து .. பின்.. முயினுத்தீன் அவர்களே..  நீ உன் வழி செல்லலாம்,  உம வழி நல வழி ஆகட்டும், மன அடக்கம் மட்டும் பெற்று விட்டால் எல்லாம் அடங்கிவிடும், அல்லாஹ்வுக்காக அஞ்சுவதை எந்த கணத்திலும் கைகொண்டிரும்  என நல உபதேசம் புரிந்து எல்லாம் வல்ல ஆண்டவனை எண்ணி தவத்தில் ஆழ்ந்தார்கள்.

No comments:

Post a Comment