Pages

Friday, June 8, 2012

மைந்தனுக்கு திருமணம்


மைந்தனுக்கு திருமணம் 

ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகைக்கு வாலிப பருவம் வந்தது. தன் மகனாரை அழைத்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள். அருமை மகனாரே !! நான் தங்களுக்கு திருமணம் முடித்து வைக்க ஆசைபடுகிறேன் என கூறினார்கள். தனக்கு திருமணம் வேண்டாம் என்று ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் மறுத்தார்கள்.

அருமை மகனே !! உமது முதுகு தண்டில் இருந்து ஆறு ஆண்மகனும், இரண்டு பெண் மகளும் வெளிவருவார்கள் என்பதை நீர் அறிவீர..உமது சந்ததிகள் இந்த நாகூர் எல்லையில் பரந்த விருட்சிகர மரமாய் வாழ்வார்கள் என்பதை நீர் அறிவீரா.. உமது சந்ததியில் உலமாக்களும், மார்க்க அறிவு மேதைகளும் இஸ்லாம் மென்மேலும் வளர காரணமாய் இருக்க போகீறார்கள் என்பதை அறிவேரா.. அல்லாஹ்வின் நாட்டத்தை மறுக்க நமக்கு சக்தி இல்லையே என கூறினார்கள். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை சொன்னது மறுப்பேதுமின்றி சகலமும் அறிந்தவர்கள் தாங்கள், என் விதிப்படி நடக்கட்டும் என சம்மதம் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment