விளையாடும் வயதில் ஆண்டவனின் எண்ண ஓட்டம்..
அருமை நாயகத்திற்கு
நான்கு ஆண்டுகள்
நிரம்பின, வயதுக்கு மீறிய தெளிவு
பெற்றிருந்த நாயகத்தை
பெற்றோர்கள் ஆரம்ப மார்க்க கல்வி பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் ஹஜ்ரத்
செய்து அப்துல்
காதிர் நாயகத்தை
ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் மதிப்புடன் நடத்தினர்.
ஒழுங்கும் , சுறுசுறுப்பும், ஆர்வமும், முதீர்ந்த கேள்வி
அறிவும் மரியாதை
பண்பும் பெற்றிருந்த நாயகத்திடம் ஒரு வித பக்தியே
வைத்து இருந்தனர். ஹஜ்ரத் நாயகம்
குர்ஆன் ஓதினால்
மற்றவர்கள் மெய்மறந்து கேட்பார்கள், இசைபோல ஆயத்துக்களை ஓதும் போது கேட்போர்
கண்ணில் கண்ணீர்
தானே கொட்டும், அதை போல் நாயகம் அவர்களின் சின்னசிறு பிரகாச
கண்களில் நீர் தேம்பி நின்று
மணி போல பொலபொல வென உருளும், சில சமயம் தேம்பி
தேம்பி அழுவார்கள்.
அந்த சின்னசிறு பருவத்திலேயே ஹஜ்ரத்
நாயகம் அவர்கள்
மார்க்க கடமைகளில் கண்டிப்புடன் நடந்து
கொண்டார்கள். ஐவேளை தொழுகையும் விடாது
தொழுகுவர் , நோன்பு நோற்பார்
, தின் பண்டங்களை வாங்கி சாப்பிட
பெற்றோர் தரும் சிறு காசுகளை
கூட ஏழை எளியோர்க்கு கொடுத்து
மனம் மகிழ்வர்.
பள்ளியில் பாடம் முடிந்தால் வேறு எங்கும் விளையாட
செல்லாமல் அருகில்
உள்ள மஸ்ஜிதுக்குள் சென்று பள்ளி விடும் வரை நபில் தொழுகுவார்கள்.
இடைவேளையில் பிற சிறுவர்கள் விளையாடும் போது தான் மட்டும் தனியே உட்கார்ந்து வானத்தை
பார்த்தவாறு சிந்தனையில் ( மனம் தியானத்தில் ) ஈடுபடுவர். விளையாடும் சிறுவர்களை பார்த்தால் ஹஜ்றது நாயகத்தின் சிந்தனை பல கேள்விகளை அவர்கள்
மனதுக்குள் இவ்வாறு
எழுப்பும் , விளையாட்டுக்கு அப்புறம்
என்ன ?.ஓய்வு.. ஓய்வுக்கு அப்புறம் என்ன ? உறக்கம்.. உறக்கத்திற்கு அப்புறம்
என்ன ? பிறகு விழிப்பு
..அப்புறம் விளையாட்டு ???. எதற்கும் ஒரு முடிவும் , தொடரும் இருக்க
வேண்டும் என ஹஜ்ரத் நாயகத்தின் அடி மனம் உணர்த்தியது.
இந்த சிறு வயதிலேயே உயரிய சிந்தனை திறனோடு
பற்பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்லி
கொள்ள ஆசைபடுகிறேன். வலிமார்கள் தங்களுக்கென்று எதையும் வேண்டியதில்லை.. உண்டாலும் உட்த்தினாலும் உறங்கினாலும் மனைவி மக்களுடன் வாழ்ந்ததாலும் இந்த அனுபவங்களை இதயத்தில் நிழைய விடுவதே
இல்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாமே
அல்லா ஒருவனே, அவனது ஜோதி காட்சி தரிசனமே, தங்களுக்கு என்று எதையும் வேண்டாத
அந்த பெருமை
சுடர் மணிகள்
மக்களின் நலத்திற்காகா எப்போதுமே இறைவனிடம் இறைஞ்சி கொண்டே
இருப்பார்கள்.
No comments:
Post a Comment