கொள்ளையர் விரட்டிய கோமான்
மானிக்கபுரில் கொள்ளையர்கள்
தோன்றி மக்கள்களின் உடைமைகளையும் உயிர்களையும் சூறையாடினர், கடந்த சில வருடங்களாக நீதி நிர்வாகம் சீர்கெட்டு சட்ட ஒழுங்கு மழுங்கி
போய் இருந்தது.
நிறைமாத கர்ப்பிணியான அன்னை செயிதத்து பாத்திமா அவர்கள் நகரத்தின் நிலை கண்டு பெரிதும் மனம் வருந்தினார், மக்களை காப்பற்றும் படி எல்லாம் வல்ல அல்லாஹ்வை தொழுது துஆ கேட்டு இறைஞ்சினார்கள்.
அப்போது ஒரு மெல்லிய மயக்கம் அவர்களை ஆட்கொள்கிற மாதிரி இருந்தது, சில கணங்களில் மயக்கம் தெளிந்து கண் விழித்த போது உருவிய வாளுடன் சுந்தர வாலிபர் தன முன் நிற்பதை கண்டார், தாயே.. அஞ்சாதீர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துகொண்டான், இனி கொள்ளையர்கள் இந்த நகரத்தை தன் கனவில் கூட நினைக்க மாட்டார்கள் , அப்படி ஒரு பாடம் அவர்களுக்கு கற்பிக்கவே என்னை எல்லாம் வல்ல அல்லாஹ் அனுப்பியுள்ளான் என கூறி தனக்கென தயாராக இருந்த குதிரை மீது ஏறி பறந்து சென்றார்கள்.
சிறிது நேரத்துள் கொள்ளையர்கள் மண்ணில் விழுந்து புரள்வதை மக்கள் கண்டனர், செத்தோம் செத்தோம் என கொள்ளையர்களின் அலறல் கெட்ட வண்ணம் இருந்தது. கொள்ளையர்கள் அனைவரும் நகரை விட்டு வெகு தூரம் ஓடினர், நகரில் அமைதியை நிலை நாட்டிவிட்டு திரும்பி வந்த வாலிபரை அன்னையார் வியப்பாய் நோக்கினார்கள்.
மகனே !! நீ யார் !! எங்கிருந்து வருகிறாய் !! என வினவினார்கள்.. சுந்தர வாலிபர் பதில் கூறவில்லை.. புன்னகைத்தார். திடிரென அவர் தோற்றத்தில் சலனம் உண்டாயிற்று ஒரு ஒளி பிழம்பாய் உடல் மாறிற்று, பின்னர் அந்த பிரகாசமான ஒளி சிறு புள்ளியாய் சிறுத்து அன்னையாரை நெருங்கி இன்னும் நெருங்கி மறைந்தது. சட்டென்று அன்னையார் தன்னில் ஒரு மாறுதலை உணர்ந்தார்கள். அந்த வாலிபரை கண்டதும் தனது வயிறு காலியாக இருந்ததும், வாலிபர் ஒளியாய் மறைந்த பின் தனது வயிற்றில் கனம் கூடியதும் நினைவுக்கு வர பேரதிசியத்தில் ஆழ்ந்தது விட்டார்கள்.
அப்படியானால் அந்த வாலிபர் என் மகனா ? வயிற்றில் இருக்கும் சிசுவா இத்தனை அற்புதங்களை நிகழ்த்தியது என பேரதிசியத்தில்
ஆழ்ந்தது விட்டார்கள்.
No comments:
Post a Comment