Pages

Friday, June 8, 2012

சவூதி அரேபியாவில் கருணை நாயகம்


சவூதி அரேபியாவில் கருணை நாயகம் 

சீடர்களுடன் ஜித்தா நகரை அடைந்த ஹஜ்ரத் நாகூர் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் ஆதித்தாய் ஹவ்வா ( அலை ) அவர்களது கப்ரு இருந்த இடம் சென்று ஜியாரத் செய்த பின் காலனியை கழற்றி விட்டு தக்பீர் , தஹ்லீல் முழக்கத்துடன் மக்கா நகரை நோக்கி நடக்க தொடங்கினார்கள்.

மக்காவில் கபாத்துல்லாவை வலம் வந்து ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு இபுறாஹீம் ( அலை ) அவர்களது மகாமில் நபில் தொழுது பின்பு ஜம்ஜம் கிணற்றில் நீரருந்தி பின் தனது பாட்டனார் கெளது நாயகம் தங்கியிருந்த திருத்தலத்தில் முகாமிட்டார்கள். மறுநாள் அங்கே அடக்கமாயிருந்த பெரியோர்களின் தளங்களுக்கு சென்று ஜியாரத் செய்ய துவங்கினார்கள். பின்னர் எம் பெருமானார் முஹம்மது நபி ( ஸல் ) உதயமான பத்கா என்ற இல்லம் அடைந்து ஹஜ்ஜு காலம் வரும் வரை இக்திகாப் உடன் சில்லாயிருந்தார்கள்.

ஹஜ்ஜு முடிந்தவுடன் மதீனா நகர் சென்ற ஹஜ்ரத் நாகூர் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் எம் பெருமானார் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களின் ஜியாரத் ஷெரிப்பில் நின்று மணிகணக்கில் கண்ணீர் உகுத்தார்கள். தாத்துல்லாவின் ஜமாலை மனம் நிறைய கண்டு கழித்தார்கள். ஆத்மீகமாய் எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு உரையாடி நல உபதேசம் பெற்று கொண்டு பின் ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக்கை தரிசித்து விட்டு மக்கா திரும்பினார்கள். 

மக்கா ஷெரிப்பில் ஹஜ்ரத் நாகூர் ஆண்டவர்கள் தொடர்ந்தார் போல் ஆறு வருடங்கள் தங்கியிருந்ததாக சொல்லபடுகிறது. அந்த ஆறு ஆண்டுகளும் அரேபிய தீபபற்பம் முழுவதும் சுற்றி வந்தார்கள் எனவும் மார்க்க பணிநிமித்தம் ஒவ்வொரு நொடியையும் கழித்தார்கள் எனவும் ஹஜ்ஜு காலத்தில் மட்டும் மக்கா வந்துவிடுவார்கள் எனவும் ஒரு சில நூலில் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment