Pages

Friday, June 8, 2012

அதிசய காலனி


அதிசய காலனி

தனது மனைவியும் உறவினர்களும் கூட வெறுக்கும் நாற்றமெடுக்கும் உடலுடன் கூடிய தச்சன் நாகூர் ஆண்டகையை தரிசனம் செய்து தன் நோய் தீர்க்க வேண்டினான். அவன் குணமறிந்த கருணை வள்ளல் ஏக நாயகனிடம் பிரார்த்தனை செய்து அவனது நோயை தீர்த்து வைத்தார்கள்.

தன் நன்றியை தெரிவிக்க காத்திருந்த அந்த தச்சனுக்கு ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தனது நகரத்தில் மார்க்க சொற்பொழிவு ஆற்றி கொண்டிருப்பதை அறிந்தான் , அவசர அவசரமாக சந்தன கட்டையில் ஒரு ஜோடி காலனி தயார் செய்தான். கடும் வெயிலையும் பார்க்காமல் ஓடோடி சென்று நாயகம் கால் பணிந்து காலனியை அணிக்க முயலும் போது தான் காலனியில் குமிழ் வைக்க மறந்ததை எண்ணி சங்கடபட்டான்.

அவன் மனமறிந்த அருமை வள்ளல் ஹஜ்ரத் ஆண்டகை அவர்கள், தச்சனே உமது மனம் எல்லாம் வல்ல அல்லாஹ் அறிவான். அந்த குமிழ்கள் இல்லாமலேய இந்த காலணிகள் என் காலோடு நடந்து வரும் என கூறினார்கள். என்ன ஆச்சர்யம் குமிழ்கள் இல்லா காலனி ஹஜ்ரத் ஆண்டகையின் காலோடு ஒட்டி நாயகம் அவர்கள் நடந்து சென்றார்கள். இந்த காலனி இன்றளவும் நாகூர் தர்கா செரிபில் தங்க பெட்டியில் வைத்து பாதுகாக்க படுகிறது. 

No comments:

Post a Comment