Pages

Friday, June 8, 2012

உலகெங்கும் வியாபித்த நாயகம்


உலகெங்கும் வியாபித்த நாயகம்

அரபு நாடுகளில் ஒன்பது வருடங்கள் கழிந்தபின் ஹஜ்ரத் நாகூர் நாகூர் ஆண்டகை அவர்கள் தாயகம் திரும்ப நாட்டம் கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு வயது முப்பத்திஏழு , மகானிற்கு வயது ஒன்பது. ஜித்தா துறைமுகத்தில் எல்லோரும் கப்பல் ஏறினார்கள்.

பின்னர் அங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசிய, லட்ச தீவுகள், இலங்கை மற்றும் பல இடங்களுக்கு சென்று மார்க்க சொற்பொழிவு ஆற்றி எண்ணிலடங்கா கிராமத்தினை காட்டி பல தரப்பட்ட மக்களை  இஸ்லாத்தில் இணைய செய்தார்கள்.  ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் மார்க்க சொற்பொழிவுக்காகவும் இஸ்லாத்தை விரிவடைய செய்யவும் இலங்கைக்கு சென்று வந்தார்கள். குறிப்பாக காலி என்னும் ஊரை சென்றடைந்து பின் பு அங்கிருந்த ஆதம் மலை  சிகரத்தை அடைந்தார்கள். ஆதம் மலை அருகே பல நாட்கள் தவம் இருந்து தன் பாவங்களை மன்னிக்க கோரி அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். பின்பு கொழும்பு நகரம் சென்று மார்க்க சொற்பொழிவு ஆற்றியதாக கூறப்படுகிறது.  ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையால் அந்நாளில் மட்டும் ஐம்பாதியரத்துக்கும் அதிகமான மக்கள் இலங்கையில் இஸ்லாத்தை ஏற்றதாக கூறப்படுகிறது. நாகூர் ஆண்டகையின் சிறப்பை கொண்டாடும் வகையில் கொழும்பில் உள்ள பள்ளிவாசலில் நாகூர் ஆண்டகை மாசமான ஜாமதுல் ஆகிரில் பிறை கனக்குபடி கந்தூரி விழா எடுத்து இலங்கை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். 


அதைப்போல் நாகூர் ஆண்டகை அவர்கள் மலேசியாவுக்கு சென்று பினாங்கில் சொற்பொழிவு ஆற்றிய போதும் எண்ணற்ற மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மேலும் பலரை இஸ்லாமிய வழி முறைகளில் நெறிபடுத்தினர்கள். பினாங்கில் தற்போது உள்ள ஜார்ஜ் டவுனில் சில நாட்கள் தங்கி சில்லா இருந்து இறைவனை வழிபட்டார்கள். இப்போது நீங்கள் பீணங்கு சென்றால் கூட ஜார்ஜ் டவுனில் நாகூர் தர்கா என்ற நினைவு சின்னம் இருப்பதை காணலாம். மேலும் இங்குள்ள மக்கள் ஜாமதுல் ஆகிரில் பிறை கனக்குபடி கந்தூரி விழா எடுத்தும் மவுலுது ஓதியும் கொண்டாடி வருகிறார்கள். 

மேலும் சிங்கப்பூரில் தெலுக் ஐயர் தெருவில் நாகூர் தர்கா நினைவு சின்னமே அமைத்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் அதை மனித நேய மனித ஒற்றுமை சின்னமாக அறிவித்து அந்நாட்டில் தபால் தலையில் நாகூர் தர்கா பொறித்த படத்தை வெளியிட்டு கவுரவித்தது. மேலும் இங்கும் கந்தூரி நாட்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டும் வருகிறது. 

அதைப்போல் பர்மா, இந்தோனேஷியா , வியட்நாம், ஆகிய நாடுகளிலும் நினைவு மண்டபங்கள் உள்ளன என்ற சில நூல்களில் குறிப்பிடப்பட்டன. இத்தகைய நிகழ்வுகள் நமக்கு அறிவிப்பது என்னவென்றால் நாகூர் நாயகம் அவர்களால் எண்ணற்ற மக்கள் மனதில் இஸ்லாம் விதைக்கபட்டும் வளர்க்கபட்டதையும் மார்க்க அறிவு பேணி நல மர்ர்க்கம் தந்த நன்மை நாயகம் புகழ் உலகெங்கும் வியாபித்து இருப்பதையும் அறிய முடிகிறது.

No comments:

Post a Comment