Pages

Friday, June 8, 2012

ஆதம் நபி சந்திப்பு



ஆதம் நபி சந்திப்பு 

தனது சீடர்களுடன் கானகம் வழியே பிரயாணம் செய்து கொண்டு இருந்துதா ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் வழியிலே வயதான தம்பதியரை கண்டார்கள். அந்த தம்பதியர் இக்கால மனிதர்களை போல் இல்லாமல்  வியப்பு தோற்றத்தில் இருந்தனர். ஒரு குன்றின் மேல் இருந்த அந்த தம்பதியர். என் அருமை மகனே !!! ஷாகுல் ஹமீதே !! என அழைக்க ஆண்டகை மட்டும் அங்கு நெருங்கி சென்றார்கள். ஆண்டகை திரும்பி வந்த பொது கையில் இரு திருவோடு பாத்திரம் இருக்க சீடர்களில் ஒருவர் எஜமான என்ன இது என்று வினவினார்கள்

அதற்க்கு ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் " இதனை ரிக்வத் என்பார்கள் , தேவை படும் போது தேவைப்பட்ட உணவை இதனிலிருந்து பெற்று கொள்ளலாம் என்றார்கள். உடனிருந்த முயினுதீன் கேட்டார்கள் அந்த பெரியவர்கள் யார் என , அதற்க்கு ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் சொன்னார்கள் "அவர்கள் தான் மனித குலத்தின் ஆதி பெற்றோரான தந்தை ஆதமும் தாய் ஹவ்வாவும் அவர்கள் தான் தமக்கு இந்த பாத்திரத்தை வழங்கி மறைந்தார்கள் "என நவின்றார்கள். 

No comments:

Post a Comment