மீண்டும் ஹிலுறு நபியின் தரிசனம்
நாகபட்டின வாசிகள் மிக பெரிய மரியாதை வரவேற்பு
அளித்து ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகைகளை கவுரவித்தார்கள். பின்னர் ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
ஒரு நாட்டம்
வேண்டி கடலோரத்தில் நாற்பது நாள் (
இன்று சில்லடி
என்று அழைக்கபடுகிறது ) தளத்தில் சில்லா இருந்தார்கள்.
நாட்கள் நகர நகர பதில் ஒன்றும் கிடைக்காததால் அழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள். அப்போது
ஹிளுறு ( அலை ) தோன்றி ஷாகுல்
ஹமீதே !! என்ன சிந்தனை என வினைவினார்கள்.
அந்தமான் சென்று
சுலைமான் ( நபி ) அவர்களை தரிசிக்க
நாடினேன், அங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ள மாணிக்க கிணற்றை பார்க்கவும் இஸ்லாத்தை அங்கு பரப்பவும் இறைவனிடம் உத்தரவு கேட்டேன்.
பதில் இல்லை என்றார்கள்.
அதற்க்கு ஹிளுறு ( அலை ) நவின்றார்கள். எல்லாம் அறிந்தவன் அவன். நீர் அங்கே செல்ல அவன் நாடவில்லை. பிற்காலத்தில் தோன்ற போகிற இமாம் மகாதீ அவர்களுக்ககா அந்த தீவுகள்
விடப்பட்டன. அவர்களை
கொண்டுதான் அங்கு தீன் ஒளி விசும், நீரும் உமது சந்ததியினரும் இறுதி நாள் வரை தரிப்பட
வேண்டிய இடம் இதுதான். என இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
மேலும் தன்னுடன் ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகையை அழைத்து
இதுதான் நீர் இருக்க போகும்
/ மரணிக்கும் இடம் (
முதுபக் ) , இது உம்மை நீராட்டும் தளம் (
ஆஷிரஹான் ), இது உம்மை தொழுவிக்கும் இடம் (
பீர் மண்டபம்
) இங்குதான் உம்மை தரிசிக்க கோடானா
கோடி மக்கள்
உலக இறுதிநாள் வரை வந்து குவியுவார்கள் என ஒரு மணல் மோட்டையும் காட்டினார்கள். பின்னர் ஹஜ்ரத் நாகூர் நாயகம் கூறினார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அப்படியா!!
ஆகட்டும்!! என மனமுவந்து ஹஜ்ரத் நாகூர் நாயகம் ஏற்றார்கள்.
No comments:
Post a Comment