Pages

Friday, June 8, 2012

ஹிலுறு நபியின் முதல் தரிசனம்


ஹிலுறு நபியின் முதல் தரிசனம்       

நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி , மாதங்கள் வருடங்கள் ஆனது. ஒரு நாள் ஒரு மாலை நேரம் ஹஜ்ரத் நாயகம் அவர்கள் ஒரு நாவல் மரத்தடியில் தியானத்தில் இருந்த போது தூய வெள்ளாட தரித்த பெரியவர் ஒருவர் தோன்றினார். அன்பு குரலில் ஹஜ்ரத் நாயகத்திற்கு சலாம்  கூறி, எல்லாம் வல்ல அல்லாஹ்வால் உவக்கபட்ட செய்து அப்துல் காதிர் வலியுல்லாஹ்வே உமது வாயை திறவும், ஹஜ்ரத் நாயகம் வாயை திறந்ததும் தனது உமிழ் நீரை பெரியவர் மூன்று முறை உமிழ்ந்ததும் அதை ஹஜ்ரத் நாயகம் விழுங்கினார்கள். ஆம். பெரியாரின் உமிழ் நீர் தான் சொர்கத்தின் பேரமுது, மார்க்க அறிவு ஞான பாலும் அதுவே.. ஹஜ்ரத் நாயகம் அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹு அக்பர்.. அருமை பெரியவரே தாங்கள் யார் என அறிந்துகொள்ள ஆசை என வினவினார்கள். அதற்க்கு அந்த பெரியவர் நான் தான் ஹிளுறு ( அலை ) என்று கூறி மறைந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஹஜ்ரத்து நாயகம் அவர்களும் ஹிளுறு அலை அவர்களும் பல முறை சந்தித்து போதனை கேட்டு வந்தார்கள்.

No comments:

Post a Comment